Posts Tagged ‘ ரஜினிகாந்த் ’

அரசியல்

அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது. [மேலும்..»]

அரசியல், சினிமா

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

ரஜினி விஷயத்தில் அவர் இந்திய தேசிய நலனை முன்னெடுப்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்து விரோதிகளின் கைப்பாவையாகிவிட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அதையே காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன் ரஜினியைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் தோன்றுகிறது... மக்கள் இந்து மனநிலையுடனும் இந்திய தேசிய மனநிலையுடனும் வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் இருக்கிறார்கள். மக்களுடைய அந்த உணர்வுக்குக் குரல் கொடுக்க எந்த தமிழக கட்சியும் முன்வருவதில்லை. ரஜினிகாந்த் தனது பிரபல்யத்தைப் பயன்படுத்தி அந்தக் குரலை முன்னெடுக்கவேண்டும். வெற்றி தோல்வி பற்றி சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய விஷயம் அல்ல... [மேலும்..»]

சினிமா

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன... தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை எளியவர்களின் காப்பாளர்.. இவையெல்லாம் கபாலிக்கு முன்... இந்து விரோதம் என்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. பராசக்தி காலம் தொடங்கி நடந்துவரும் அசட்டு, அபாயகரமான விஷயம் தான். ஆனால், இப்போது இந்து விரோத படங்களின் பெருக்கமானது முந்தைய இரண்டு காலகட்டத்தைவிடக் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படவேண்டியது. ஏனென்றால், அது இதுவரை எப்போதும் இருந்திராத இந்திய விரோதம் என்ற விஷத்தையும் நுட்பமாக உள்ளே கொண்டிருக்கிறது... [மேலும்..»]

அரசியல், சினிமா, ராமாயணம்

ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

June 11, 2018
-
ராவணனை ஹீரோவாக்குதல்:  ஒரு பார்வை

வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது... இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத... [மேலும்..»]

அரசியல், சினிமா

காலா: திரைப்பார்வை

காலா: திரைப்பார்வை

ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்... மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்...இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்... [மேலும்..»]

அரசியல்

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை

ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே... ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

அரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது.... [மேலும்..»]

அரசியல்

தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!

தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!

காய்த்த மரம் தான் கல்லடி படும். வற்றிய குளத்தை நாடி எந்தப் பறவையும் வராது. இன்றைய சூழலில் பாஜக மட்டுமே நம்பிக்கை தரும் கட்சியாக மிளிர்கிறது. எனவே, மக்களின் மனநிலை மாற்றத்தைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள் இப்போது பாஜகவை கடுமையாக எதிர்க்கத் துவங்கி உள்ளன. மொத்த்தில் தமிழக அளவில் தேர்தலின் நாயகியாக இருந்த ஜெயலலிதாவின் இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார் மோடி... தேசிய அளவில் காணப்பட்ட மோடி மைய அரசியல் தமிழகத்திலும் வந்துவிட்டது. இதுவே, பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி தான். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லும் கட்சியினரை விட, ஏற்கனவே என்ன சாதித்திருக்கிறார் என்பதைத்... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

புன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]

October 28, 2010
-
புன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]

சாப்பாட்டு டோக்கனையும் பர்சையும் காப்பாற்றவேண்டுமே என்கிற பதற்றம் தொற்றிக்கொண்டது... திரும்பி உணவுக்கூடத்தின் மைய மண்டபத்துக்கு வந்தபோது கே.ஜி எனக்காகக் காத்திருந்தான். "சும்மா, உள்ள சுத்திப்பார்க்கலாம்னு போனேன்," என்று தமிழில் முணுமுணுத்தேன்... மைய மண்படத்தை விட்டு வெளியேறி குறுக்குச் சந்துகளைக் கடந்து வந்தால் தேவஸ்தானத்து வாசலில் ராயர் சிலையாய் உட்கார்ந்திருந்தார்; லாங் ஷாட்டில் [மேலும்..»]

சினிமா

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?... இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.... [மேலும்..»]