Posts Tagged ‘ ரமண மகரிஷி ’

இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்

இரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, ஆனால் கிறித்துவம் குப்பையில் சேரும். இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்... கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன்  கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். 'பாவிகளே' என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக,... [மேலும்..»]

இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.  இளையராஜா சொன்னது முற்றிலும் சரியே என்றும் அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து இந்த உரையில் (Podcast)  பதிவிட்டிருக்கிறேன். உலகில் இருக்கும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இயேசு உயிர்த்தெழவில்லை என்று திட்டவட்டமாகவும் ஆதாரத்துடனும் சொல்கிறார்கள்.  இந்த அரைமணி நேர உரையில் அவற்றைத் தொகுத்தளித்திருக்கிறேன்.   கிறிஸ்தவ மதவெறியர்களும், போதகர்களும், பாதிரிகளும் மட்டும்தான் உயிர்த்தெழுதல் என்ற மூடநம்பிக்கையை விட மறுக்கிறார்கள். அதன் காரணம் என்ன? “இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவமே பொய்!” என்ற பைபிள் வாக்குமூலம்தான் அதற்கு காரணம். கிறிஸ்தவம் எவ்வாறு பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த பாட்காஸ்டில் விளக்கியிருக்கிறேன்.... [மேலும்..»]

இளையராஜா @ கூகிள்

March 26, 2018
By

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார்... [மேலும்..»]

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

February 18, 2014
By

எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.... பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்.... சிரசில்... [மேலும்..»]

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

January 14, 2014
By

அங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்.... குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன்? யமனை இது அப்புறப்படுத்துமா?... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

January 1, 2013
By

அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் 'பிணம் சுடு தடி போல்' என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்.... தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித்... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

December 5, 2012
By

அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது.... கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்... . கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்.... [மேலும்..»]

[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

July 31, 2012
By

அணை உடைந்ததாலும், அமராவதி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் கிராம மக்கள் சிவன் கோயிலிலும், விவேகானந்த உயர்நிலைப் பள்ளியிலும் தஞ்சமடைந்தனர். வெள்ளம் வடியும் வரையில் 3 வேளை உணவு சமைத்துக் கொடுத்து உதவியாக இருந்தார் சுவாமி சித்பவானந்தர்... ”சாதி வித்தியாசம் பாராட்டுவது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நோக்கமன்று. யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். சத்திய, தர்ம வழியில் நாம் நடப்போம்”... வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை - இத்தகைய இளைஞனுக்கு கீதைப் புத்தகத்தை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவைகள் என்பது சுவாமிகளின் கருத்து... [மேலும்..»]

ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

உலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் "பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்" என்பார் ரமணர். அந்த "நான்" இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்? ருமதி. கனகம்மாள் எழுதிய "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை"யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது... [மேலும்..»]

ரமணரின் கீதாசாரம் – 14

ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey