
அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன…. உணர்பவன் பொருளை உணரவில்லை என்றால், உருவங்களும் நாதங்களும் எதற்கும் பயனில்லாது போகின்றன. இவ்வாறு உணர்பவனின் பிரம்ம நிலையில் அனைத்துமே அதன் தன்மைகளான சத்-சித்-ஆனந்த சொரூபங்களாகவே விளங்குகின்றன. அந்த நிலையில் காண்பவன்- காணப்படுவது- காட்சி என்று எதனையும் பிரித்து அறிய முடியாது எல்லாம் ஏக சொரூபமாகவே விளங்கும். காணும் தனது சொரூபமே காட்சியாகி நிற்பதை உணர்வதே அறிய வேண்டியவற்றுள் எல்லாம் உயர்வான பேரறிவாகும்….