Posts Tagged ‘ ராகுல் காந்தி ’

அரசியல்

ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

எங்க தலைவரு கொதிக்காரு, ஒமக்கு ஜோக்கா இருக்கு என்னா?... சரி, மேலே... போற வழில சீன தூதரகத்தப் பாத்துட்டாரு. அதென்னா சைனீஸ்ல எழுதீருக்கான்? நிறுத்துன்னுட்டாரு... நானும் போனேனா? உள்ள போனவரு “உங்க செஃப் எங்க?"ன்னு ரிசப்ஷன்ல கேட்டாரு... அவன் சீஃப்னு நினைச்சிகிட்டு தூதரைப் பாக்க வந்திருக்காருன்னு , ஒரு ஃபார்ம் கொடுத்து ’நிரப்பு’ன்னுட்டான். அதுல இங்க்லிஷ்லயும் சைனீஸ்லயுமா எழுதியிருந்திச்சா, அண்ணன் குழம்பிட்டாரு... ஒரு வெண்பா சொல்லுங்க. அப்படியே கட்சி இதழ்ல போட்டுருதேன்... கொடுத்துருவம்... [மேலும்..»]

அரசியல், ஊடகங்கள்

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

  தமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. குறிப்பாக, ஜூனியர் விகடன், டைம் பாஸ் ஆகியவற்றில் ஆசிரியர் குழுவில் உள்ள சில விஷமிகளின் கைவண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை மீறி இந்த அவலம் நடந்து வருகிறது.  ‘அடிக்கடி வெளிநாடு செல்லும் மோடியை எப்படியேனும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்’ என்ற ஒரு கிறுக்குத்தனமான ஜோக் போதும் விகடனின் விஷமத்தை அறிய. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும் இப்படித்தான் அவரது பெயரைக் கெடுக்க ஊடகங்கள் பலவகைகளில் முயன்றன. அதன் எதிர்விளைவாகவே... [மேலும்..»]

அரசியல்

காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக  காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. “சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர்... [மேலும்..»]

அரசியல், வரலாறு

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது  போல்,  பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்”  என்று கொக்கரித்துள்ளார்.  யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள். 1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து, இன்று வரை நாட்டிற்கு... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

ராகுல் காந்தி கூறியிருப்பது போல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவில்லை. ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியவில்லை. பாராளுமன்றம் முடக்கப்பட்டதும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர், நீதி மன்றம் தெரிவித்த கருத்தின் காரணமாகவும் பதவியை ராஜினாமா செய்தார் என்பது உலகறிந்த உண்மையாகும்.... ராகுல் காந்தி அவர்களே, தாங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். தாங்கள் 1984-ல்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள், பொது

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் முற்றிலும் வேறானவை  என்று அண்மையில் டைம்ஸ்  நவ் தொலைக்காட்சிக்கு அளித்த  நேர்காணலில் காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.  இந்த  இரண்டு நிகழ்வுகளிலும் காங்கிரஸ், பாஜக அரசு நடந்து கொண்ட விதமும் முற்றிலும் வேறானது என்றும் அவர் கூறினார். அவர் கூறியது உண்மை தான்.  கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள். (பெரிதாகத் தெரிய படத்தின் மேல் க்ளிக் செய்யவும்) [மேலும்..»]

அரசியல்

திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!

திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!

கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம் என்பது விஷம் என்று நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் என் தாய் என்னிடம் வருத்தப்பட்டு தெரிவித்தார்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியிருந்தார் ராகுல் காந்தி.  அதை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு மகிழ்ந்தன 24 மணி நேர செய்தி அலைவரிசைகளும் ஆங்கில ஊடகங்களும். அதுகுறித்து  மேலும் விளக்கிய அவர்,  “பதவி அதிகாரம் என்பது விஷம் தான். பதவி அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்ளை கையாளத் தெரியாமல் போகும் போது அது விஷமாகிறது. மேலும், அதிகாரத்தை பொதுநலத்திற்காக பயன்படுத்தாமல் சுயநலத்துக்காகப் பயன்படுத்தினால்... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

அர்த்தமற்ற புகார்கள்

அர்த்தமற்ற புகார்கள்

அடடா! நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும் அறிவித்தார்கள், காங்கிரஸ்காரர்கள் தூக்கம் கெட்டுவிட்டது. உணவு உள் செல்வதில்லை. சதா காலமும், தூக்கத்திலும் கூட மோதி நினைவுதான். கனவிலும் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் பாவம் நரேந்திர மோடி... முன்பெல்லாம் இவர்களை எதிர்த்து நின்றவர்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் நரேந்திர மோதி அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தினம் ஒரு கூட்டம், ஒவ்வொரு மாநிலத்தில் நடத்துவதும், அதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து கேட்டு அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும் இவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. அதன் எதிரொலிதான் காங்கிரஸ் தலைவர்களின் ஓலம், ஐயய்யோ மோடி எங்களை... [மேலும்..»]

அரசியல்

ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

ஐயா இளவரசரே, உங்கள் பாட்டியோ, உங்கள் தந்தையோ கொலை செய்யப்பட்டதற்கு இந்த நாடே கண்ணீர் விட்டு அழுதது. உங்களுக்குத் தெரியாது, பாவம், நீங்கள் அப்போது சின்ன பாப்பா. இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த குற்றவாளிகள் யார் என்பதையெல்லாம் காவல்துறை, புனலாய்வுத் துறை இவை தூண்டித் துருவி கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது... தம்பி! இது என்னவோ பள்ளிக்கூடத்து நாடகம் இல்லை. இது ஒரு பெரிய நாட்டின் வரலாற்று நிகழ்வு. இந்த அரசியலில் வெற்றி, தோல்வி, நாட்டின் முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் இவை அனைத்துமே உள்ளடங்கியிருக்கின்றன.... உங்களையெல்லாம் மூட்டை முடிச்சோடு வண்டி ஏற்றிவிட மக்கள் தயாராகி... [மேலும்..»]

தேசிய பிரச்சினைகள், பொது

உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத், பத்ரி நாத் அமைந்துள்ள பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு நடைபெற்று இருக்கிறது. புனித கங்கை அன்னையும், யமுனை அன்னையும் தன் ஊழி நடனத்தை ஆடியிருக்கிறார்கள். இந்துக்களின் புனித யாத்திரைக்காலமான இந்த நாள்களில் உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசங்களில் பெய்த பெரு மழையால் கங்கையிலும், யமுனையிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வழியில்  நதியின் பாதைக்கு இடையூறாகவும் ஆக்ரமித்தும் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் விடுதிகளோடு அருகில் இருந்த கட்டிடங்களையும், வழிபாட்டு தடங்களையும்  நகர்த்தி விட்டது. தனக்கான பாதையை நதிகள் ஏற்படுத்தி கொண்டது.  அலக்நந்தா, பாகீரதி, மந்தாகினி நதிகளிலும்... [மேலும்..»]