Posts Tagged ‘ ராசா ’

வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்

மன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்ற நியமனத்தில் மோதி அரசு நீக்கியதை ஊழலில் திளைத்த காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ... [மேலும்..»]

2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன? [மேலும்..»]

இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…

...தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்.. [மேலும்..»]

ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2

December 20, 2010
By

வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை. [மேலும்..»]

ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1

December 18, 2010
By

கையும் களவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது... [மேலும்..»]

நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01

இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே. [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey