Posts Tagged ‘ ராமகிருஷ்ண தபோவனம் ’

சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

தமிழகத்தை வாழ்விக்க வந்த  தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 - 1985).  சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது.  யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள  'வேதாந்தம் தந்த வீரத்துறவி - சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு' என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது.  மூன்று பாகங்களாக,  1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும்  விரிவாக இந்த நூல் விளக்குகிறது... [மேலும்..»]

2012: புத்தக கண்காட்சியில் தபோவனம்…

2012 ஜனவரியில் நடக்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் பழைய மாணவர்கள் சார்பாக ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் Book Stall போடவுள்ளோம். இதற்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். 97509-55515, 99440-23118. [மேலும்..»]