கோதண்டத்தில் சிக்கிய தேரை [கவிதை]

ராம ராஜ்ஜிய முழக்கங்கள் கேட்டு நாட்டாரின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது.. மற்றவரால் துயர் என்றால் உன்னை அழைக்கலாம்
உன்னால் ஒரு துயர் என்றால்..?முடிவற்று நீள்கிறது உன் அரசியல் சாசன அருளுரை.. தேரையின் உடல் ஊடுருவி கோதண்டம் தரை தொடும் நிமிடம் உனக்கு உரைக்கக்கூடும், அது அழுந்தப் பதிந்தது அதன் ஆன்மாவில் என்பது…

View More கோதண்டத்தில் சிக்கிய தேரை [கவிதை]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)

இராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ஆக அயோத்தி போகவேண்டும் என்பது இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. அப்படிப் போய் இறைவனை அடைவதற்கு, வானரர்கள் இராமரைத் தவிர வேறு யாரிடம் போய் வேண்டுவது? இறைவனுக்கு நாம் வேண்டிக்கொள்வதில், “இறைவா! நாங்கள் உன்னை அடைவதற்கு வழி காட்டு” என்பதைத் தவிர வேறு எந்த கோரிக்கை அதை விடச் சிறந்ததாக இருக்கிறது?… வால்மீகி ஒவ்வொரு இன்னல்களிலும் மனிதனான இராமர் எப்படி தன் நிலைப்பாடை எடுக்கிறார் என்பதைக் காட்டும்போது, அந்தக் காலத்தைய அவல நிலைச் சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படியும் ஒருவனால் இருக்க முடியும் என்று காட்டுவதே இந்த இலக்கியத்தின் இலக்கு. அதைக் கேட்டு ரசித்து, அது சொல்லும் வழியில் நடக்க நமக்கு அந்த இராமரே வழி காட்டட்டும்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

“எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை” – இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி…. எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது…. சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம் காண்பிக்கப்படும்போது, அதை அவர்கள் பலமின்மை என்று தவறாக நினைக்கிறார்கள்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2

மனித முயற்சிக்கும் அப்பாற்பட்ட காவியம் ஒன்றைப் படைப்பதற்கு எது நடந்தாலென்ன என்றதொரு துறவு மனமற்று, சுற்றுமுற்றும் பார்த்து உள்ளம் கனிந்து உருக வேண்டிய நிகழ்ச்சி ஒன்று தேவைப்பட்டது. அதுவும் வால்மீகி முனிவருக்குத் தானாகவே அமைந்தது… ராம ராஜ்யத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது மக்கள் அனைவருமே ராமரைப் போலவே நீதி, நேர்மையுடன் வாழ்வதால் அரசு என்றோ அரசாங்கம் என்றோ ஒரு அதிகாரத்துடன் கூடிய அமைப்பு கூடத் தேவை இல்லாத நிலை உருவாகும்… அரசு அலுவல்களின் ஒரு பகுதியாக தானம் செய்யவேண்டிய அதிகாரிகளுக்கு, வசிஷ்ட மகாமுனிவர் அவர்கள் எத்தகைய மனப்பான்மையுடன் தானம் அளிக்கவேண்டும் என்று கூறுகிறார்…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம். [….] கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

View More முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்