
இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன? இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா?… இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார் பாராட்டினார் எனலாம்…