Posts Tagged ‘ ராம் விலாஸ் பஸ்வான் ’

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், பொது

2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன... ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன? வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை... [மேலும்..»]

அரசியல்

திரிபுரமும் வசமானது! காவிமயமாகிறது பாரதம்!

திரிபுரமும் வசமானது! காவிமயமாகிறது பாரதம்!

மோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு அதன் தலைவரான அமித் ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி! [மேலும்..»]

அரசியல், சூழலியல், தேசிய பிரச்சினைகள்

காவிரி அனைவருக்கும் பொதுவானது!

காவிரி அனைவருக்கும் பொதுவானது!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு காவிரி விவகாரத்தில் நேர்வழியைக் காட்டி இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் கடமையை மோடி அரசு நிறைவேற்றும்போது, யாரும் குறைகாண முடியாது. இதைக் காட்டி பாஜகவை கர்நாடக எதிரியாக காங்கிரஸ் கட்சியால் சித்தரிக்க முடியாது. எனவே, மிக விரைவில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்படும் என்று நம்பலாம்... [மேலும்..»]

அரசியல்

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மொழிவாரி மாநிலங்கள்:  உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]

அரசியல்

மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்

மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையை மீறி, மீண்டும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராகி இருக்கிறார். அதேசமயம், மாற்று அரசியலுக்கான வாய்ப்பு என்ற கருதுகோள் இந்த முடிவுகளில் மிகக் கடுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் களம் திமுக- அதிமுக என்ற இரு திராவிட அரசியல் கழகங்களிடையிலான வேட்டை மைதானமாக மாறி இருக்கிறது. இதை மாற்ற இம்முறை அருமையான வாய்ப்பு உருவாகி இருந்தது. ஆனால், மூன்றாவது அணி என்ற பெயரில் உருவான கோமாளிக் கூட்டணியால் அந்த வாய்ப்பு தகர்க்கப்பட்டுள்ளது. தன்னை அதீதமாக முன்னிறுத்திய... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…

இரு திராவிடக் கட்சிகளும் அந்திம திசையில் உள்ளன. கட்சித் தலைமையை மையம் கொண்ட இவ்விரு கட்சிகளுக்கும் நீண்ட எதிர்காலம் இல்லை. விரைவில் ஏற்படவுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியலிலும் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது. ம.ந.கூ, பாமக, பாஜக அணிகளிடையே எதனை மாற்று அரசியலாக நீங்கள் கருதுகிறீர்கள்? உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா? வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா? தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா?... [மேலும்..»]

அரசியல்

தேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..

தேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..

இந்திய அரசியல் வரலாற்றில் மகதம் பேரிடம் வகித்து வந்திருக்கிறது. நாட்டை ஒருங்கிணைத்த அரசியல் பேரரசு முதலில் அமைந்த இடம் மகதம். அதன் தலைநகரான பாடலிபுத்திரம் தான் பொதுயுகத்திற்கு முந்தைய 300 ஆண்டுகள் முன்னிருந்து சுமார்  ஆயிரம் ஆண்டுகளுக்கு பாரத தேசத்தின் அரசியல் மையமாக இருந்தது. அங்குதான் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் உருவானது. அதுவெல்லாம் பழைய கதை. அன்றைய மகதம் தான் இன்றைய பிகார். இன்றைய அரசியலிலும் பிகார் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆனால், குப்தப் பேரரசு, மௌரியப் பேரரசு உள்ளிட்ட மாபெரும் அரசுகள் உருவான கழனியான பிகார் இன்னமும் நோஞ்சான் மாநிலமாகத் தான் இருக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களுடன்... [மேலும்..»]