இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12

“ராமோ விக்ரவான் தர்ம” என்று இராமரைப் பற்றி ராவணனிடம் மாரீசன் சொல்வதைப் போன்ற ஒரு உண்மையான, மனப்பூர்வமான நற்சான்றிதழை ஒரு பகைவனிடமிருந்து பெறுவது மிகக் கடினம். ஆம், அவன் தன் அனுபவத்தின் மூலம் சொல்கிறான். மற்ற நல்லவர்கள் செய்யும் நற்காரியங்களினால் நமக்கு நன்மை கிடைப்பது போல, சில தீயவர்கள் செயலால் நமக்குத் தீமையும் வரலாம் என்பது எவரது வாழ்க்கையிலும் ஒரு அனுபவமே. அதேபோல நாம் செய்யும் செயல்களும் நல்லதோ, கெடுதலோ மற்றவரையும் பாதிக்கும். நீரில் உள்ள விஷப் பாம்புகளை பிடித்துக் கொல்ல முயலும்போது அவை நடுவில் சிக்கும் மீன்களும் இரையாகின்றன என்ற வால்மீகியின் உவமை மிகவும் பொருத்தமானதே.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12

அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

View More அவ்வரங்கள் இவ்வரங்கள்

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது. ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்…

View More கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்

சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும்… தமிழ் கற்பித்த அகத்தியர் திலோத்தமை என்ற நடன மாதுவின் மகன் என்ற வேதகால வர்ணனையை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்…

View More திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்

கம்பனின் கும்பன் – 3

“அதுதான் அவன் கும்பனுக்களித்த standing ovation. கம்ப இராமாயணம் முழுவதிலும் வேறெங்கும் பார்க்க முடியாத இராமனின் மெய்ப்பாடு. ஒரு போர்வீரனாக, கடமையே கண்ணினாகத் தொண்டாற்றிய பிறகு, இராம பக்தனாகவே காட்சியளிக்கிறான் கும்பகன்னன்.

View More கம்பனின் கும்பன் – 3