Posts Tagged ‘ ரீச் ஃபவுண்டேஷன் ’

கோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை

மாமல்லபுரத்தில் எழுந்துள்ள சர்ச்சை! ஸ்தல சயனப் பெருமாள் கோவிலை மத்தியத்தொல்லியல் துறை எடுத்தாள்வது சரியா என்பதாகும். அரசியல்வாதிகள் கூக்குரலுக்கும், உள்ளூர் சுயநலவாதிகளின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல், கோவிலுக்கும், அந்த தலத்திற்கும் வரும் நன்மைகளை மனதில் கொண்டு, மக்கள் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதனை விளக்கவே இந்த கட்டுரை.. மத்திய தொல்லியல் துறையின் கீழ் வாழும் கோவில்களில் பூஜைகள் ஆகம விதிப்படி தொடர்ந்து நடக்கும் கோவில்கள் பலப்பல - வடக்கே பூரி ஜெகன்னாதர் கோவில், துவாரகா, தஞ்சை பிரகதீஸ்வரர் தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோவில்... (முனைவர்... [மேலும்..»]

கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

ஜூலை-1 (ஞாயிறு)  அன்று ரீச் ஃபவுண்டேஷன் அமைப்பு,   கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்துகிறது.  தமிழகத்தின் பாரம்பரியக் கோயில்களைப் பாதுகாத்தல்; சிற்பக்கலை, வரலாறு, கல்வெட்டுக்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும்  முறைகேடுகளை கவனப்படுத்துதல்  ஆகிய பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும்  அமைப்பு இது. தொல்லியல் துறை அதிகாரிகள்,  வரலாற்று அறிஞர்கள் வழிகாட்டுதலில் கலை ஆர்வலர்கள், களப் பணியாளர்கள் பங்கு பெறுகின்றனர். ஜூலை-1 (ஞாயிறு)  அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. கே.கே.மேத்தா அரங்கம், ஆர் எஸ் புரம், கோவை  (சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் அருகில்). அழைப்பிதழ்  இங்கே.  அனைவரும் வருக!... [மேலும்..»]