Posts Tagged ‘ லக்‌ஷ்மணன் ’

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

April 22, 2013
By

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ். ராமன் 30.1 நன்னடத்தையே நல்ல பாதுகாப்பு தரும் அசோக வனத்திலிருந்த சீதையை அழைத்து வருமாறு இராமர் விபீஷணனிடம் கேட்டுக்கொண்டார். இராவணனின் அரண்மனைக்குள் அந்த வனம் இருந்ததால் அவள் அங்கு காவலில் வைக்கப்பட்டு  இருந்தாள். கைகேயிடம் சொன்னபடி அந்தப் பதினான்கு வருஷங்களும் அவர் காட்டை விட்டுவிட்டு ஒரு கிராமத்தின் எல்லையைகூடத் தாண்டவில்லை. அதனால் அவர் சீதை இருக்குமிடம் தேடி இலங்கைக்குள் நுழைந்திருந்தால், அது ஒரு விதி மீறலாகி இருந்திருக்கும். சீதையை மீட்பதற்குத்தானே அவர்கள் கடலில் பாலம் கட்டியும், பலத்த இழப்புடனும் அரக்கர்களுடன் போரிட்டார்கள் என்பதால்,... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29

March 30, 2013
By

வால்மீகி இராமாயணத்தில் எழுதியிருக்கும் போர் முறைகளும், தளபதிகள் வகுக்கும் வியூகங்களும், சண்டையில் நடக்கும் பேச்சுக்களும் வாள் வீச்சுக்களும், ஆயுதங்கள் பற்றியும் அவைகளைக் கையாளும் விதமும் என்று விதவிதமாக விவரங்கள் இருப்பதும், அதை அவர் விவரிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகளும் அவரைப் போரில் ஒரு கை தேர்ந்த கலைஞர் என்றுதான் காட்டுகிறது. அவரது சொற்களும், விவரிப்புகளும் ஒரு பத்திரிக்கையின் போர் நிருபரையே பிரமிக்க வைக்கும் அளவு இருக்கின்றன.... இராமாயணக் காலத்திலிருந்து இன்றைய போர் முறைகள் வெகுவாகவே மாறியிருந்தாலும், போர் புரிய வேண்டிய மனோநிலை, வேண்டிய தைரியம், திறன், முயற்சி, பொறுமை என்ற எல்லாக் குணங்களும் இன்றும் போருக்கு வேண்டிய முக்கியமான... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

February 20, 2013
By

தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே   அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான். ஒரு சண்டையில் எதிரியை வெல்ல... [மேலும்..»]