Posts Tagged ‘ லோக்சபா தேர்தல் -2014 ’

அரசியல்

காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை... பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா...எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்... " உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

புதிய பாரதம் மலர்கிறது

May 17, 2014
-
புதிய பாரதம் மலர்கிறது

நரேந்திர மோதியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரின், அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல. ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய் தந்தையரின் குடும்பத்தினரின் தியாகங்களையும் அபேட்சைகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம் தேசபக்தி, நேர்மை, தன்னலமின்மை, எளிமை, தியாகம், மன உறுதி ஆகிய உன்னதப் பண்புகளைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப் படும் தருணம் இது. "Ab ki bar Modi Sarkar"... [மேலும்..»]

அரசியல்

இன்று வாக்களிக்கு முன்…

இன்று வாக்களிக்கு முன்…

2014 பாராளுமன்றத் தேர்தலில் இன்று வாக்களிக்கும் முன் இவற்றை எண்ணிப்பாருங்கள்.. [மேலும்..»]

அரசியல்

நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

தேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது... இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும்.... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2

April 19, 2014
-
மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2

பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார். இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.... கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

April 19, 2014
-
மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர் ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.... சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான... [மேலும்..»]

அரசியல்

மோடி திருமணத்தை மறைத்தாரா?

மோடி திருமணத்தை மறைத்தாரா?

  இதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா தொகுதியில் போட்டியிட  தன்னுடைய வேட்பு மனுவைத் தக்கல் செய்தபோது,  தான் மணமானவர் என்பதையும், மனைவியின் பெயர் யசோதா பென் என்பதையும் சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  குறிப்பாக காங்கிரஸ்,  தி.மு.க. ஆகிய கட்சிகளிடையே இந்த விவகாரம், வெறும் வாயை மெல்லுவோர்க்குக் கிடைத்த அவலாகவே பயன்படுத்தப்படுகிறது. இன்றைய தலைப்பாகப் பேசப்படுகிறது. நாட்டில் நிலவும் ஏராளமான பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விழுப்புரத்தில் மு.கருணாநிதி தன் அருகில் துணைவியார் ராசாத்தி அம்மாளை (ஒருகாலத்தில் இவரை யார் என்றே தெரியாது என்று சொன்ன புண்ணியவான் தான் கலாகார்)... [மேலும்..»]

அரசியல், பொது

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது வரலாற்றையே மாற்றி எழுதுவது தான். அப்படிப்பட்ட தருணம் தமிழகத்திற்கு வருகிறது ஏப்ரல் 24-ல். நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது லோக்சபா தேர்தல், நமது நாட்டிற்கே திருப்புமுனையாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இத்தேர்தல் இதுவரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கட்சி அரசியலை மீறி, அரசுக்கு எதிரான மனப்போக்கையும் தாண்டி, எதிர்கால நாயகர் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறும் இத்தேர்தலில், நரேந்திர மோடி என்ற சொல்லே பிரதானம். ஆதரவோ, எதிர்ப்போ, மோடி இப்போது பெற்றுள்ள முக்கியத்துவத்தை இதுவரை சுதந்திர... [மேலும்..»]

அரசியல், சமூகம், வழிகாட்டிகள்

மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்

மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்

நரேந்திர மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொன்டவர். அடுத்த தேர்தலைக் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர்... உங்களையும் என்னையும் போலவே, மிக எளிமையான சூழலில் ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாக அவர் பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலும் ரயில்வே பிளாட்பாரத்தில் வேலை செய்தார். நேர்மையின், மன உறுதியின், தேசபக்தியின் சின்னமாக அவர் திகழ்கிறார்... நமது சரியான தேர்வை எண்ணி நமது குழந்தைகள் பெருமைப் பட வேண்டும். மிகச் சிறந்த பிரதமரை அளித்தோம் என்று வரும் தலைமுறைகள் நன்றி கூறும் வகையில் நமது தேர்வு இருக்க வேண்டும். அதற்காகத் தான், நான் திரு... [மேலும்..»]

அரசியல்

பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)

பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)

பாஜகவின் தேர்தல் அறிக்கை நாடெங்கும் புதிய நம்பிக்கை அலையை உருவாக்கியுள்ளது. பொதுத் தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் பரபரப்பாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த 52 பக்க அறிக்கையின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து தினமலர் ஒரு நேர்த்தியான 8-பக்க சிறப்பிதழை ஏப்ரல்-8 அன்று வெளியிட்டது. வாசகர்களின் வசதிக்காக அந்த சிறப்பிதழின் பக்கங்களைத் தொகுத்து ஒரே pdf கோப்பாக வழங்குகிறோம். இந்த கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து படிக்கலாம்... பல்துறை பொருளாதார வளர்ச்சி, தேசப் பாதுகாப்பு, மக்கள் நலன், கலாசார உணர்வு என்று பல அம்சங்களிலும் சிறப்பான... [மேலும்..»]