Posts Tagged ‘ லோக்பால் ’

லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2

December 26, 2013
By

ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம்,  வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,... என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள்.... [மேலும்..»]

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

December 23, 2013
By

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…   லோக்பால்: அன்று முதல் இன்று வரை… ஊழல் பெருக்கத்தின் போது தான் அதை ஒழிக்க என்ன செய்வது என்ற சிந்தனை வரும். அவ்வாறே 1960களில் இந்தியாவில் ஊழல் நிலைகொள்ள ஆரம்பித்த தருணங்களில்... [மேலும்..»]

லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்

முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கான காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்குப் பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும். [மேலும்..»]