ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு..

View More ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

பாரதி: மரபும் திரிபும் – 7

“தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள் பாடியதாக” பாரதி மீது ஒரு அவதூறு… தனது 14வது வயதில் கல்வி கற்பதற்காக உதவி செய்யுமாறு எட்டயபுர ராஜாவுக்கு எழுதினார். அதிலுள்ள மிடுக்கு பிற்காலத்தில் எழுதுகிற சீட்டுக்கவியிலும் எதிரொலிக்கிறது – தன்னை நேரிலே வந்து பார்த்து பரிசு கொடுக்க வேண்டும் என்கிறார். இங்கே பாரதி மற்ற புலவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார்… தன் தேவைக்காக நிதி கேட்ட வ.உ.சிக்கு வக்காலத்து வாங்கி, காந்தி வ.உ.சியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்த மதிமாறன், தன் தேவைக்காக நிதி கேட்ட பாரதியை மட்டும் விமர்சிக்கிறார் என்றால் அவரது உள்நோக்கம் என்ன?…

View More பாரதி: மரபும் திரிபும் – 7

பாரதி: மரபும் திரிபும் – 3

”நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது… சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா… .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்… நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்– மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.

View More பாரதி: மரபும் திரிபும் – 3

போகப் போகத் தெரியும் – 40: பூகோளத்திலும் முட்டை

திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு இவை இளைத்தவையல்ல. 50 லட்சம் மக்கள் வாழும் ஈராக்கும், 60 லட்சம் மக்கள் வாழும் மலேயாவும் தனி அரசுகளாக இருக்கலாமென்றால் 100 லட்சம் மக்கள் வாழும் பாண்டியநாடு ஏன் தனியாக வாழக்கூடாது என்று கேட்கலாம். மதுரை முதலாளிகள்கூட சென்னைக்கும் கோவைக்கும் சேலத்துக்கும் போய் தொழில் நடத்துகிறார்கள்; கோவை வாழ்கிறது, மதுரை தேய்கிறது என்றெல்லாம் கோஷங்களை வகுக்கலாம். காரைக்குடி இரும்பும், குமரிக் கடற்கடை மோனசைட்டும் இருக்கும்போது நமக்கென்ன குறைவு என்று மேடை அதிர முழங்கலாம். வல்லியில் நாடகத் தோரணையில் வாய்ச்சொல் வீரம் வழங்குவதே அரசியல் என்றாகிவிட்டால் எதைத்தான் சொல்லக்கூடாது.

– பக். 11, 12 / சரித்திரப் புரட்டர்கள் / எஸ். ராமகிருஷ்ணன் @ எஸ்.ஆர்.கே.

View More போகப் போகத் தெரியும் – 40: பூகோளத்திலும் முட்டை

தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்

தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்… சிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன் ..

View More தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்