அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்

வடு மாங்காய், நம் நாட்டில் அழிந்து வரும் ஒரு பயிர் இனம் . இது சாகுபடி செய்யப்படுவது கிடையாது. வனப்பகுதிகளில் மானாவாரியாக விளையக் கூடியது. பழமாக மாற்றி சாப்பிட முடியாது. ஊறுகாய்க்கென பிரத்தியேகமானது.. சரி, காளமேகப் புலவரின் “திங்கள் நுதலார் திரு மனம் போலே கீறி” என்ற மாவடுப் பாடலுக்கு வருவோம். இதற்கு இரண்டு பொருள் உண்டு.. மாவடு உண்ட மகாதேவராக சிவபெருமான் 63 நாயன்மார்களில் ஒருவருக்கு அருள்புரிந்தார்..

View More அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்

பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்

பிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை, மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம்… ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள். படையினர் அவர்களைக் கொல்லக் கொல்ல மொத்தம் 393 பேர்கள் அங்கு அந்த மரத்தைப் பாதுகாப்பதற்காக உயிரை விட்டிருக்கிறார்கள். இதை பிஷ்னோய் பழங்குடி மக்களின் மூத்தவர் ஒருவர் குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்கிறார்…

View More பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்