Posts Tagged ‘ வறுமை ’

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

January 8, 2015
By

நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்.... 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது... மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது.... [மேலும்..»]

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1

January 7, 2015
By

”உங்களைப் போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்கள் எல்லாம் இந்தப் பெண்மணியை ஏன் இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை!” என்கிறார் ராம்பகன் சேரியின் பண்ணாலால் மாணிக். அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார் அவர். "“மதர் தெரசாவின் அமைப்பு? மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர்கள் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது!”.. உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக்... [மேலும்..»]

திரைப்பார்வை: The Middle of the World

February 23, 2014
By

இது ஒரு சாலைப் பயண சினிமா. ப்ரேசில் நாட்டின் வறுமையும், வறட்சியும் நிறைந்த வடக்குப் பகுதியில் இருந்து 1000 ரியாஸ் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தன் 7 பேர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஆயிரம் ரூபாய் வேலை ரியோ டி ஜெனிராவில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நான்கு சைக்கிள்களில் ரியோவை நோக்கிக் கிளம்பி விடுகிறான்.... இந்தியாவிலும் வறுமை உண்டு, அசுத்தங்கள் உண்டு, சாக்கடைகள் உண்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி நமக்கு இன்னும் ஆன்ம நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அந்த ஆன்மாவை... [மேலும்..»]

ஜானகியின் காதல்

January 29, 2014
By

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர். அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இங்கிலாந்து சென்றதும் உனவு பிரச்சனை அவரை வாட்டி எடுத்தது. அது உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன் 33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்... அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. 'நான் இறந்தாலும் என்... [மேலும்..»]

இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?

நீங்கள் ஒரு ஏழை இந்து சமூகத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி என்றால், உங்கள் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 50,000 க்குள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித்தொகை, இல்லாவிட்டால் இல்லை. ஆனால் இதே நீங்கள் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவோ (”சிறுபான்மையினர்”) இருந்தால் வருமானம் ஒரு பொருட்டே இல்லை. அதிர்ச்சி அடையாதீர்கள் . மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் சிறுபான்மையினருக்கு ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் அதாவது இந்துக்களை விட 500% அதிகமாக இருந்தாலும் உதவித்தொகை கிடைக்கும்! மேலும் இவர்களுடைய வருமானத்திற்கு யாரும் உத்திரவாதம் அளிக்க வேண்டாம். அவர்களாக ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் வருமானம்... [மேலும்..»]

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7

ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்... பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது...5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு... இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100... [மேலும்..»]

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6

உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!... எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா?.... எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.... ஒரு உதாரணத்திற்காக, திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்.... [மேலும்..»]

பாரதி: மரபும் திரிபும் – 7

"தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள் பாடியதாக" பாரதி மீது ஒரு அவதூறு... தனது 14வது வயதில் கல்வி கற்பதற்காக உதவி செய்யுமாறு எட்டயபுர ராஜாவுக்கு எழுதினார். அதிலுள்ள மிடுக்கு பிற்காலத்தில் எழுதுகிற சீட்டுக்கவியிலும் எதிரொலிக்கிறது - தன்னை நேரிலே வந்து பார்த்து பரிசு கொடுக்க வேண்டும் என்கிறார். இங்கே பாரதி மற்ற புலவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார்... தன் தேவைக்காக நிதி கேட்ட வ.உ.சிக்கு வக்காலத்து வாங்கி, காந்தி வ.உ.சியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்த மதிமாறன், தன் தேவைக்காக நிதி கேட்ட பாரதியை மட்டும் விமர்சிக்கிறார் என்றால் அவரது உள்நோக்கம் என்ன?...... [மேலும்..»]

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2

"The Great Leap Forward" என்பதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்து போனதாக, கம்யூனிஸ்டுகளால் நியமித்த குழுவே அரசுக்கு அறிவித்தது. இந்த அறிக்கை சில வருடங்களுக்கு முன் பொதுவில் கசிந்ததில், அந்த நிகழ்வில் பலரால் கவனிக்கப்படாத ஒரு கொடூரமும் நடந்தது தெரியவந்தது. நிலங்களை கட்டாயமாக அரசாங்கம் கையகப்படுத்தும் முனைப்பில் மாவோவின் அல்லக்கைகள் இருக்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில சொந்தக்காரர்கள் 7 இலட்சம் பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதே வெட்கம் கெட்ட சீன கம்யூனிஸ்ட் அரசு, 1979க்கு பின், சீனர்கள் நிலங்களை வாங்கி... [மேலும்..»]

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1

இந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்... 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான்... இடதுசாரி பொருளாதார கொள்கையை அனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey