Posts Tagged ‘ வாழும் கலை ’

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்

முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் இந்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. குடியுரிமை வழங்க வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் தலைமையில் இயங்கும் வாழும் கலை (Art of Living) அமைப்பு தமிழமெங்கும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்திற்கு முழு ஆதவரளிக்குமாறு எமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பகுதியில் உள்ள வாழும் கலை அமைப்பு தன்னார்வலர்களைத் தொடர்பு கொண்டு கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெறலாம். இணையம் மூலம் ஆதரவு தெரிவிக்க, Online Petition படிவத்தில் கையெழுத்திடவும். இது குறித்து மேலும்... [மேலும்..»]