இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது…. இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான அளவு கிளர்ச்சி எழுப்பப் பட்டவுடன் பந்தை அமெரிக்கா இந்தியா மீது திணிக்கிறது. இப்பொழுது ராஜபக்சேவைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பால் திருப்பப் படுகிறது. இந்தியா அதைக் கட்டாயம் செய்ய முடியாது. அப்படிச் செய்யாத பொழுது தனித் தமிழ் நாடு கோரிக்கையை மேலும் வலுப் படுத்தலாம். இப்படி ஒரு திட்டம் இதன் பின்னே இருக்கக் கூடுமோ என்றும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது….

View More இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை

கருணாநிதியிடம் இருந்து தட்டிப்பறித்த ”தமிழினத் தலைவர்” பட்டத்தைத் தக்க வைக்க மேலும் மேலும் தவறு செய்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்; இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை எதிர்க்கிறார்… தமிழக அரசின் நடவடிக்கைகளை தங்களுக்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளும் புலி ஆதரவாளர்கள் வரம்பு மீறுகின்றனர்… 80-களின் இறுதியில் தமிழகத்தில் நிலவிய பயங்கரத்தை நாம் மறந்துவிடக்கூடாது… சிங்களர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தமிழகத்தில் வளர்ப்பது இலங்கை வாழ் தமிழர்களை மேலும் பாதிக்கவே செய்யும்.

View More தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை

டெசோ: புதிய மொந்தையில் பழைய கள்!

எப்போதெல்லாம், தனக்கும் திமுகவுக்கும் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னைக்காக உருகுவது…

View More டெசோ: புதிய மொந்தையில் பழைய கள்!

இது ஒரு வரலாற்றுத் தவறு

விடுதலைப் புலிகளின் எந்த கொடுஞ்செயலும் இலங்கை ராணுவத்தின் அக்கிரமத்தை நியாயப்படுத்திவிட முடியாது. அதனளவில் அவை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியவை. இக்கண்டனத்தை ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் குறிப்பிட்டிருந்தால், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலைப்பாடு அமெரிக்காவின் இந்த உள்நோக்கம் கொண்ட பெரியண்ணன் தீர்மானத்தை கேள்வி கேட்பதில் ஒரு குறைந்த பட்ச தார்மிக உள்ளீட்டைக் கொண்டதாக இருந்திருக்கும். ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது… ராசீவ் காந்தியின் பெயரை சொல்லி. அவர்களை மிக மோசமான ஒரு கொடுமைக்கு பலி கொடுத்திருக்கிறோம். இத்தகைய தருணத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்த ஒரு நீத்தார் கடனையாவது செய்ய வேண்டும்…

View More இது ஒரு வரலாற்றுத் தவறு

மரணதண்டனை அரசியல்கள் – 1

இக்கோரிக்கை நான் முற்றிலும் எதிர்பாராமல் தமிழ்ஹிந்து தளத்தில் குளவியார் என்பவரிடமிருந்து எழுந்ததே என்னிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த நீண்ட பதில் கட்டுரையை எழுத வைத்து விட்டது. [..] அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க காங்கிரஸும் பிற முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போட்ட ஒரு நாடகம். அதில் தமிழக முதல்வரும் குளவியும் தடுமாறி விழுந்து விட்டார்கள். எப்படி?

View More மரணதண்டனை அரசியல்கள் – 1

அப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் ?

எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று தமிழர்களை தூக்கில் போடுவது அநியாயமானது. இந்த மூன்று தமிழ் இந்துக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

View More அப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் ?

காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று

1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

View More காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று