Posts Tagged ‘ விதவைகள் ’

வேதங்களில் விதவை மறுமணம்

உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.. இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகிறது ஒரு சுலோகம். பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது.. சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து.... [மேலும்..»]

இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை – பாரதியார் கட்டுரை

... ஆணுக்கேனும், பெண்ணுக்குகேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம்... வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக்கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள்.... [மேலும்..»]