விநாயகர் நினைவுகள்

கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன. நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட பல கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது… பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்… பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும். இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்….

View More விநாயகர் நினைவுகள்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது… விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.

View More விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்