Posts Tagged ‘ விருதுகள் ’

தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது

இந்து தர்மத்திற்கும், பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கும் நீண்டகாலம் சிறப்பாகப் பங்களித்துத் தொண்டாற்றி ஆசான்களாக விளங்கும் 108 பெரியவர்களுக்கு Grateful2Gurus (குருமார்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்) என்ற பெயரிலான விருதையும் கௌரவத்தையும் வழங்குவதாக இந்த ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று இண்டிக் அகாதமி அமைப்பு அறிவித்தது. நமது இணையதளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான தமிழறிஞர், கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்களின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்தது. 2019 அக்டோபர் 5ம் தேதியன்று பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா (பாரதிய ஜனதா... [மேலும்..»]

தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017

இந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத் கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள். இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்), ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்) மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். விருது விழா ஜூன் 10, 2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக, அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]

விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்

October 13, 2015
By

இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த "கொள்கையுடைய" நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்...மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. .நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம்... [மேலும்..»]

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

”பி.பி. ஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். பல மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டு, அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம்” என்று 2012 டிசம்பரில் வந்த கடிதத்தில் கண்டிருந்தது.. ஆச்சரியமாக இருந்தது. இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?.... ”அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம்.... [மேலும்..»]

பால.கௌதமனுக்கு விருது

பால.கௌதமனுக்கு விருது

தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பால.கௌதமன், 09-06-2013 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் இந்து தர்ம சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார். பால.கௌதமனுக்கு தமிழ்ஹிந்து சார்பாக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். திண்டுக்கல் தலித் இளைஞர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை ஆவணமாக எடுத்து உலகுக்கு காட்டியவர் பால. கௌதமன். தமிழ்ப் புத்தாண்டு, ஹிந்துக்களை திமுக தலைவர் இழிவு படுத்தியதற்கு எதிரான வழக்கு, கிறிஸ்தவர்களின் தேவசகாயம் பிள்ளை புரட்டுக்கு எதிரான கருத்தரங்கம், திப்பு சுல்தான் குறித்த உண்மை வரலாறு பற்றிய பதிவுகள், பெரிய புராண தொடர் சொற்பொழிவு ஆகியவை மூலமாகவும்,... [மேலும்..»]

கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

விஷ்ணுபுரம் இலககிய வட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது (2011) மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப் பட இருக்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி கோவையில் நடக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவின் போது ஜெயமோகன் எழுதிய "பூக்கும் கருவேலம்" (பூமணி படைப்புகள் குறித்த விமர்சன நூல்) நூல் வெளியீடும் நடைபெறும்... [மேலும்..»]

நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்

பல இடங்களில் கிட்டத்தட்ட கண்ணீர் உகுத்துவிடுவேனோ என்ற நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது கதை. ”சுயத்தை மற்றும் வாழ்க்கையைத் தேடும்” நாஞ்சில் நாடனின் முயற்சி முதல் நாவலிலேயே சாத்தியமாகியிருக்கிறது. .. முன்னணி இலக்கிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதிவாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இந்த விருது வழங்கப் படுவது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது... [மேலும்..»]

வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

September 15, 2010
By

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்? இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு." என்று நிறுத்தியது வேதாளம். [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey