Posts Tagged ‘ விலைவாசி ’

ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்

அதிகபட்ச விலைக்கும்(MRP) ஜிஎஸ்டிக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள்? பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% - உண்மை என்ன? ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன, அது நியாயமானதா? ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன?.... முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும்? இப்போ? வாங்கினாலும் வித்தாலும் எப்படியும் கணக்கு... [மேலும்..»]

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2

சர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை விற்பனை கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் இருந்து முழுவிலக்கு அளித்து ,சர்க்கரை துறைகளுக்கும், எத்தனால் உற்பத்தி, விநியோகம், ஆகியவற்றிற்கு தேவையான ஆய்வு நடவடிக்ககள், மேம்பாடு இவற்றை கவனித்து மேலாண்மை செய்யவும், விவசாயிகளின் நலன் காக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தனியான தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையத்தை ட்ராய், பிரசார்பாரதி போல அமைத்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்.... [மேலும்..»]

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1

லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்,விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும்... [மேலும்..»]

பெட்ரோல் விலை உயர்வு – 2

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான... [மேலும்..»]

பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. [மேலும்..»]

உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும். [மேலும்..»]

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

November 29, 2011
By

திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு,  திவாலாகும்   நிலைக்கு தள்ளிவிட்டது'' என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது? [மேலும்..»]

இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்

September 20, 2010
By

நமது மக்களுக்கு ஒரு குணம் - ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது - எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார்? பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை. [மேலும்..»]