Posts Tagged ‘ விவசாயம் ’

அஞ்சலி, வழிகாட்டிகள்

அஞ்சலி: நெல் ஜெயராமன்

அஞ்சலி: நெல் ஜெயராமன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் (வயது 50) காலமானார். அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. நெல் ஜெயராமன் தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தார். நெல் திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விவசாய ஆய்வாளர்களைப் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து விவசாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இலட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபட வைத்து, உற்பத்தியை... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

அடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்

அடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்

மூங்கில் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 1290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்தது உடனே நம் ஊர் அறிவாளிகள் நக்கல் அடித்து மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கோமாளி கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் குறுகிய காலத்தில் ஒரு 40000 கோடியையும் நீண்ட கால நோக்கில் ஒரு லட்சம் கோடிக்கு மேலும் சம்பாதித்து கொடுக்க கூடியது இந்த மூங்கில் துறை. தமிழ்நாடு முதல் திரிபுரா வரை கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வுரிமையையும் ஏற்படுத்த வல்லது என்பதை இந்த முட்டாள்கள் சிந்திக்கவில்லை. இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றன...... [மேலும்..»]

அரசியல், சமூகம், பொருளாதாரம்

மோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்

February 4, 2018
-
மோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்

வரி விதிப்புகளில் ஏற்ற தாழ்வுகள் மாற்றங்கள் வருவது எந்த நாட்டிலும் சகஜமே. இந்தியாவில் வரி கட்டுபவர்களே 3% மட்டுமே. வருமான விளிம்பை நீட்டிப்பதன் மூலமாக அந்த 3%க்கும் கீழே போய் விடும் அபாயம் உள்ளது. ஆரோக்யமான பொருளாதாரத்தில் அதிக சகவிகித மக்கள் வரி வலைக்குள் வர வேண்டும்..இந்தியா போன்ற ஒரு சிக்கலான நாட்டில் எல்லாமே கஷ்டம் தான். சிக்கல் தான். எதற்கும் எளிய தீர்வுகள் கிடையாது. தொலை நோக்குப் பார்வையும் ஊழலற்ற அரசையும் கூடுமானவரை அளிப்பவர்களை ஆதரிக்கிறேன். அந்த அளவில் மோடிக்கு மாற்றாக இந்தியாவில் வேறு எவரும் உருவாகாத வரை அவருக்கே என் ஆதரவு தொடரும்.. இன்று... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

இது தாண்டா பட்ஜெட்!

இது தாண்டா பட்ஜெட்!

இந்த ஆண்டுதான் உண்மையான நிதிநிலை அறிக்கை சுதந்திர இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த்தகைய முன்மாதிரி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க மோடி அரசுக்கே நான்காண்டுகள் ஆகி இருக்கின்றன. ஏனெனில், இதற்கான அடிப்படையை கடந்த ஆண்டுகளில் அரசு உருவாக்கி வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் அவற்றின் இரு பகுதிகள் மட்டுமே... நாட்டிலுள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களில் உள்ள 50 கோடி பேர் பயனடையும் விதமாக, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வசதி பெறும் வகையிலான மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். விவசாயத் துறையில் கடன் வழங்க ரூ. 11 லட்சம் கோடி இலக்கு.... [மேலும்..»]

உணவு, சமூகம், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்... கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்... [மேலும்..»]

உணவு, சமூகம், சூழலியல், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

இரக்கமற்ற இளஞ்சிவப்பு

இரக்கமற்ற இளஞ்சிவப்பு

வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் பெருமிதமிக்க பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை... நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

விவசாயி கஜேந்திர சிங்கின் இந்த நிலைக்கு நிலக் கையகப் படுத்துதல் மசோதாவோ அல்லது பிஜேபியோ தான் காரணமா? ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம்..தற்கொலை முடிவோடு மரத்தில் ஏறும் ஒருவர் துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு ஏறுவாரா? கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர், அவரின் வயற்காடு ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பண நெருக்கடியிலோ அல்லது கடனிலோ மூழ்கியிருக்கவில்லை என்று சொல்கின்றனர்... கேஜ்ரிவால்ஏன் ஊடகங்களை விலக்கக் கோரவேண்டும்? ஏன் தற்கொலை நடந்தபின்பும் அவர் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார்?... [மேலும்..»]

அரசியல், சினிமா

கத்தி – திரைப்பார்வை

November 18, 2014
-
கத்தி – திரைப்பார்வை

இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு, நான் தங்களின் திரைப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். தங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும் முழமையாக மதிக்கிறேன். அர்த்தமற்ற சினிமாத்தனமான விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய விமர்சனம் ஆழமானது... ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்த முதல் விஷயம் முருகதாஸ் புதிதாக கம்யூனிஸம் பேசுகிறார்... எதற்கெடுத்தாலும் முதலாளிகளை குறைசொல்லாமல் அவற்றால் நமக்கு வரும் இலாபத்தை எண்ணிப் பார்ப்போம். மக்கள் போராட்டங்களை பெரிதுபடுத்தி அதை ஊக்கப்படுத்தாமல் அரசாங்கத்திற்கு துணை நிற்போம். இறுதியில் சென்னைக்கு செல்லும் ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது...உங்கள் படத்தின் வசனத்தையே மேற்கோள் காட்டி... [மேலும்..»]

அரசியல், உணவு, சமூகம், சூழலியல்

நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்குரிய விஷயம் தான். உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது... ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை... நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும்... [மேலும்..»]

அஞ்சலி, இந்த வாரம் இந்து உலகம், சூழலியல், வழிகாட்டிகள்

நம்மாழ்வார்

நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும் பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன..... இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்சமாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி. [மேலும்..»]