Posts Tagged ‘ விவாதம் ’

அரசியல், தேசிய பிரச்சினைகள், விவாதம், வீடியோ

ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்

ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்

ஒன்றுபட்ட  ஒரே தேசமாக, ஒற்றுமையாக  நமது நாடான இந்தியா இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நானும் நண்பரும் ஒரு நாள் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தோம்.  பேசப் பேசத் தான் இது எவ்வளவு பெரிய, மகத்தான விஷயம்  என்ற உணர்வு ஏற்பட்டு அதிகரித்து வந்து.  பின்பு, இந்த உரையாடலையே ஒரு காணொளியாகப் பதிவு செய்தால் என்ன எண்ணம் தோன்றியது. அதன் விளைவே கீழ்க்கண்ட வீடியோ பதிவு... வைகோ, சீமான் போன்ற முட்டாள்கள் இந்தியா துண்டு துண்டாக உடையும்  என்ற ரீதியில் செய்யும் பிரிவினைவாத பிரசாரங்கள்,  இந்தியா ஏதடா,  இந்து ஏதடா என்பது போன்ற உளறல்கள் ஆகியவற்றையும் பற்றி இந்த... [மேலும்..»]

அரசியல், வரலாறு, விவாதம்

தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

June 22, 2017
-
தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை?.... 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்.... [மேலும்..»]

அரசியல், புத்தகம், வரலாறு, விவாதம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது - தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், ராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4

சம்ஸ்க்ருத பாஷையில் வீரம் போற்றும் கவிதைகள் (Heroic Poetry) என்ற அலகீடுகளைக் கொண்ட காவ்யங்கள் மிகக் குறிப்பாகக் காணக்கிட்டவில்லை எனினும் வால்மீகி ராமாயணம் இந்த அலகீடுகளுடன் முற்றுமாக ஒத்துப்போகும் ஒரு அபூர்வ காவ்யம் என்பது நோக்கத்தக்கது. நவீன அறிஞர்கள் ராமாயண காவ்யத்தினை இலக்கியச் செறிவுள்ள ஒரு காவ்யமாக அணுக விழைந்தாலும் அதே சமயம் இந்த காவ்யத்தில் பொதிந்துள்ள சௌர்யம் (வீரம்) போற்றும் பாங்கு ஒரே காவ்யம் இரண்டு அபூர்வமான குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமையைக் காட்டுகிறது என்றால் மிகையாகாது. [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், ராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3

ராமகதை தூய கங்கை நதியைப் போன்று வடக்கிலிருந்து தெற்கிற்கு தனது மூல மற்றும் முழுமையான வடிவில் வந்தது எனச் சொல்லலாம். ஆயிரத்து சொச்சம் வருஷ முன்னமேயே தெற்கிலே இந்த வால்மீகி ராமாயண காவ்யம் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவதானிக்கத் தக்கது. தக்ஷிண பாரதத்தில் இந்த நூலின் மீது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து எழுதப்பட்ட விரிவுரைகள் இந்த நூல் ப்ரதி மாறாது பாதுகாக்கப்பட ஹேதுவாக இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பாடாந்தரங்களிலும் பல விஷயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆயினும் தெற்குப் பாடாந்தரம்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், ராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் –  ஒரு பறவைப் பார்வை  – பாகம் – 2

இந்தியவியலாளர்கள் வேதகாலம் மற்றும் பௌராணிக காலம் என காலக்கணக்குகளை விபாகம் செய்தபடிக்கு இந்த ஆக்ஷேபம் அணுகப்படுகிறது. விண்டர்னிட்ஸ் அவர்களின் கருத்து ராமாயண கால நிகழ்வுகளில் பொருந்தாது என்பது மட்டுமல்ல. பௌராணிக ராமாயண காலத்திற்கு முற்பட்டதான பின்-வேத காலத்திலேயே இந்த்ரனின் முக்யத்வம் பின் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புறக்கணிக்க முடியாது. இந்த்ரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று காட்டப்பட்டாலும் மும்மூர்த்திளை விட தாழ்ந்த ஸ்தானத்தில் சொல்லப்படுகிறான் பின்-வேத காலத்தில் என்பது நோக்கத் தக்கது. இந்தியவியலாளர்கள் வேதகாலம் மற்றும் பௌராணிக காலம் என காலக்கணக்குகளை விபாகம் செய்தபடிக்கு இந்த ஆக்ஷேபம் அணுகப்படுகிறது. விண்டர்னிட்ஸ் அவர்களின் கருத்து ராமாயண கால நிகழ்வுகளில்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், ராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் –  ஒரு பறவைப் பார்வை  – பாகம் -1

பல்லாயிரம் ஆண்டுகள் முன் படைக்கப்பட்ட இந்தக் காவ்யத்தில் இடைச்செருகல்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்பது புரிந்துகொள்ள முடிந்த விஷயம் தான். ஆனால் ராமாயண காவ்யத்தில் நுழைக்கப்பட்ட இடைச்செருகல்கள் மிகுந்த ப்ரபாவம் மிக்கவையா? இவை வால்மீகி முனிவர் படைத்த மூல காவ்யத்தை உருத்தெரியாமல் சிதைத்துள்ளனவா? நம்மிடையே இன்று புழக்கத்தில் உள்ள வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் ப்ரபாவிக்கப்பட்டு வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட வால்மீகி ராமாயணம் என்ற மூலநூலுடன் முற்றிலும் வேறுபட்டு கிட்டத்தட்ட ஒரு பொய்க்கதையாக நம்மிடையே உலா வருகிறதா? [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், புத்தகம்

இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்

January 19, 2013
-
இந்துமதம் குறித்து மூன்று  நூல்கள்

இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞான, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்.... ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில், கேள்விக்கு உள்ளாக்கியவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் , விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே......”இந்து அடையாளம்”... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]

November 5, 2012
-
அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]

முதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்... ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது.... இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்....... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]

November 4, 2012
-
அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]

ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்....இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி... வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.... [மேலும்..»]