Posts Tagged ‘ விவிலியம் ’

பிறமதங்கள், விவாதம், வீடியோ

இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.  இளையராஜா சொன்னது முற்றிலும் சரியே என்றும் அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து இந்த உரையில் (Podcast)  பதிவிட்டிருக்கிறேன். உலகில் இருக்கும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இயேசு உயிர்த்தெழவில்லை என்று திட்டவட்டமாகவும் ஆதாரத்துடனும் சொல்கிறார்கள்.  இந்த அரைமணி நேர உரையில் அவற்றைத் தொகுத்தளித்திருக்கிறேன்.   கிறிஸ்தவ மதவெறியர்களும், போதகர்களும், பாதிரிகளும் மட்டும்தான் உயிர்த்தெழுதல் என்ற மூடநம்பிக்கையை விட மறுக்கிறார்கள். அதன் காரணம் என்ன? “இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவமே பொய்!” என்ற பைபிள் வாக்குமூலம்தான் அதற்கு காரணம். கிறிஸ்தவம் எவ்வாறு பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த பாட்காஸ்டில் விளக்கியிருக்கிறேன்.... [மேலும்..»]

ஆன்மிகம், பிறமதங்கள், விவாதம்

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?.... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், பிறமதங்கள்

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும் நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றது... இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்து கொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள்...ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே... [மேலும்..»]