Tag: வெளிநாட்டுப் பயணம்

பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை

சிலர் வாய்கூசாமல் பிரதமர் உல்லாசச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்கின்றனர். அது உண்மை என்றால் ஒரு மணிநேரம் ஒய்வு கூட இல்லாமல் இயந்திரமாக ஒரு மனிதன் உல்லாசச் சுற்றுப் பயணம் செய்வதை இப்போதுதான் நாம் பார்க்கிறோம்…இப்போது நாடுகளின் அரசியல் உறவுகள் பெருமளவு மாறி விட்டிருக்கிறது. உலக ஆளுமை என்பதன் அடையாளம் வர்த்தகத் துறையில் ஆதிக்கமே.ஏனைய மற்ற துறைகளின் முன்னேற்றம் கூட வர்த்தக முன்னேற்றத்தை ஒட்டியே அமையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆகவே பிரதமரின் இந்த ஒவ்வொரு வெளீநாட்டுப் பயணத்தின் முக்கியத்துவமும் விளைவுகளும் நமக்கு முழுதாகத் தெரிய சில ஆண்டுகளாவது ஆகும். ஆட்சியாளர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை எத்துணை முக்கியமோ அது போல மக்களுக்கும் கடந்த கால வரலாறு குறித்த நினைவு அவசியம்…

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

ஒரு ஃபிஜி தீவுக்காரரான உங்களுக்கு மோடி மீது ஏன் இவ்வளவு ஆர்வம் என்றேன். இந்தியர்களுக்குத்தான் அவரது அருமை பெருமைகள் தெரிவதில்லை. உலக இந்துக்களின் தலைவராக நாங்கள் மோடியைக் காண்கிறோம். இத்தனை நாட்களாக இப்படி ஒரு அரிய தலைவனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? இவரை பிரதமராக்காமல் என்ன செய்தார்கள் இந்தியர்கள் என்றார் அந்த டாக்ஸி டிரைவர்… டிஜிடல் இண்டியாவுக்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைப் போலவே முக்கியத்துவம் உள்ளது மோடியின் டெஸ்லா விஜயமும் மஸ்க்குடனான அவரது சந்திப்பும். சரியான ஒப்பந்தங்கள் உருவானால் இந்தியாவின் எரிசக்தி தேவை பெரும் அளவு குறையும். இந்தியாவின் வாகனஙக்ள் வெகுவாக பேட்டரி வாகனங்களாக மாறும்….

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1

முன்னேற்பாடு கூட்டத்தின் பொழுது அந்த ஹோட்டல் அரங்கமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு கூட்டத்திற்கே பெரும் அளவில் மக்கள் வந்தது நான் எதிர்பாராதது… எதற்காக இத்தனை நூறு பேர்கள் தங்கள் குடும்பம் வேலை எல்லாம் விட்டு விட்டு இரவு பகல் பாராமல் உழைத்தார்கள்? எதை எதிர்பார்த்து? அவர்களுக்குத் தங்கள் பிறந்த தேசத்தின் மீது இருந்த பற்றும் அதன் தன்னலமற்ற தலைவன் மீதான பாசமும் மட்டுமே அவர்களை அயராமல் இயக்கியது…. மோடியை ஒரு முறை இரவில் மதுரையில் மேலமாசி வீதி தெற்குமாசி வீதி சந்திப்பில் பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவர் ஒரு ஆர் எஸ் எஸ் தொண்டர் ஒருங்கிணைப்பாளர். இத்தனை வருடங்களில் அவரது கம்பீரமும் பொலிவும் பல மடங்கு கூடியிருந்தன…

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

  தமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. குறிப்பாக, ஜூனியர் விகடன், டைம் பாஸ் ஆகியவற்றில் ஆசிரியர் குழுவில் உள்ள சில விஷமிகளின் கைவண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை மீறி இந்த அவலம் நடந்து வருகிறது.  ‘அடிக்கடி…