Posts Tagged ‘ வேதம் ’

சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை

'ஓதுகின்ற வேதம்எச்சில்' என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை... வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை... [மேலும்..»]

முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்

சொற்பொழிவாளர் சுகி சிவம் அண்மையில் தெரிவித்த சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களுக்கு அ.நீயின் எதிர்வினை; தொடரும் விவாதம்.. ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி,... [மேலும்..»]

‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்

ஓசூரில்  ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்... அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக,  கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது  குறித்து ரங்கன்ஜி  பேசினார். இறுதியாக,  பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார்.  உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்...... [மேலும்..»]

கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

February 5, 2018
By

மன்யுவே எங்களிடம் வருக - வலியர்களிலும் வலியன் நீ - உனது நட்பான தவத்துடன் இணைந்து - எமது பகையை வென்றிடுக - நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ - விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ - செல்வங்களை எமக்கு நல்கிடுக... கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. 'ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்' (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி... [மேலும்..»]

தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

July 18, 2017
By

வந்தே மாதரம் பாடலைப் போன்றே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அடிப்படையில் வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. முன்னதை எதிர்க்கும் சிலர் அதைவிடவும் வெளிப்படையாக இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய பின்னதை மட்டும் ஏற்பார்களாம். பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்... சுந்தரம்பிள்ளை அந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை... [மேலும்..»]

பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

தீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள். [மேலும்..»]

சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

October 24, 2015
By

பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை... வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण - shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु - shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி... பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச்... [மேலும்..»]

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்

வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர். உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர். இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 22

“ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக்... [மேலும்..»]

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13

..இராமர் தான் சொன்னதைச் செய்யும் உண்மையான மனிதர்; வெகு உயர்ந்த குணங்களைக் கொண்ட அவர் உடலாலும் உள்ளத்தாலும் மிகத் தூய மனிதர். கண்கள் அகலமாகவும் அழகாகவும், மற்றும் கைகைள் நீண்டதாயும் இருக்கும் அவர், அனைவரிடமும் உண்மையான அக்கறை கொண்ட நல்ல மனிதர். தனது என்று எதையும் நினைக்காமல், யார் எதைக் கேட்டாலும் அதைத் தயங்காது கொடுக்கும் வள்ளலாகிய அவர், பிறருடையது எதையும் விரும்பவும் மாட்டார்; அவர்களாகவே எதைக் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ளவும் மாட்டார். அவர் என்றும் எப்போதும் உண்மையே பேசுபவர்; விளையாட்டுக்குக்கூட பொய் பேசமாட்டார்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey