Posts Tagged ‘ வைரமுத்து ’

அரசியல், கல்வி, விவாதம்

வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

January 12, 2018
-
வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு அடிமை நோய்... அமெரிக்காவிலேயே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி விட்டார்கள் ஆகவே கண்ணகி ஒரு வேசிதான் என்று தமிழகத்தில் ஒரு வைரமுத்துவினாலோ ஒரு பழநிபாரதியினாலோ பரப்பப் படும். காலப் போக்கில் அதுவே உண்மை என்று நம்பப் படும்.. இப்படியாகவே நமது அடிப்படை ஆதார நம்பிக்கைகளை திட்டமிட்டு சீர் குலைக்க இவை போன்ற ஒரு மாபெரும் சதிகார அமைப்புகளே கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அமெரிக்க பல்கலைகள் மூலமாக உருவாக்கப் பட்டு தொடர்ந்து சுழற்சி... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், விவாதம், வைணவம்

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

January 9, 2018
-
ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்... ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?...... [மேலும்..»]