ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்.

கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்…

View More ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3

ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்…. “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது…

View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3

யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2

மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. … தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்…

View More யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2