Posts Tagged ‘ ஷீலா தீக்‌ஷித் ’

விவாத களத்தில் கவர்னர் பதவி

விவாத களத்தில் கவர்னர் பதவி

சில மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் மாற்றப்படலாம்; அந்த இடங்களில் பாஜக மூத்த தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்ற ஹேஸ்யங்கள் ஊடகங்களில் உலவிவரும் சூழலில்,  அதுகுறித்து விவாதத்தைத் துவக்குகிறார் இக்கட்டுரை ஆசிரியர். . இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசின் சிபாரிசின் பேரில் குடியரசுத் தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும் நபரே கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பொதுவாக கவர்னர் என்பார் சமூகத்தில் கெளரவமான அந்தஸ்து உடையவராகவும், அரசியல் அறிவும் அனுபவமும் பெற்றவராகவும், ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த நிபுணத்துவம் உடையவராகவும், பாரபட்சமின்றி மாநில அரசு நிர்வாகம் செயல்படுவதைக் கண்காணித்து மத்திய அரசுக்கும், மாநில... [மேலும்..»]