Posts Tagged ‘ ஸ்கந்தன் ’

கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு

எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது... நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 மணிக்கு இணையம் வாயிலாக நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர்... [மேலும்..»]

கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு

பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், "கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்" என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்... [மேலும்..»]

சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை

'ஓதுகின்ற வேதம்எச்சில்' என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை... வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை... [மேலும்..»]

முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்

சொற்பொழிவாளர் சுகி சிவம் அண்மையில் தெரிவித்த சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களுக்கு அ.நீயின் எதிர்வினை; தொடரும் விவாதம்.. ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி,... [மேலும்..»]

முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்

இனியும் வாழ்வானென் ? என்ற வேகத்தில் தான் கோபுரமேறினார் நம் அருணகிரி வள்ளல். மடுவில் வீழ்ந்தாரை மேலேற்ற கைகொடுப்பது குமரன் தொழில். ஆனபடியாலே நம் ஸ்வாமியை கருணை கண்களால் நோக்கி, அருளும் கரங்களால் தாங்கி, முக்தியெனும் திருவடியால் தீண்டி என்றும் மீளா அடிமை கொண்டான்... முத்தமை" என்பவள் நம் ஸ்வாமியை ஈன்றளித்த மாதரசியின் பெயர் என்றும், அவள் பெயர் கொண்டே நம் ஸ்வாமி பாடினார் என்பதொரு நம்பிக்கை உண்டு. மேலும் இந்தப்பாடலில் மூன்று பேரின் வாசகங்கள் உள்ளதென்றொரு சூக்ஷும கருத்தும் உள்ளது... சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம், ஆணவத்தை எதிர்த்து, குருவருளால் கிடைத்த ஞான... [மேலும்..»]