ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்

ஆர்யா என்ற சந்தத்தில் அமைந்த அழகும் இனிமையும் ததும்பும் இந்தத் துதிப்பாடல் ஆதிசங்கரர் அருளியது என்று சம்பிரதாயமாக கருதப்படுகிறது.. இளஞ்சூரியனென முகமலர் – கருணை ரசம் நிறைந்து ததும்பும் கண்கள் – உயிர்தருவோனைப் போற்றுவேன் – அழகிய மகிமையுடையோன் – அஞ்சனையின் பேறானோன்..

View More ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்

தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்

பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு…

View More தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்

சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்

ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளியவை. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது… வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது…

View More சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்

ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்

நந்திதேவருக்கும், ப்ருங்கி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் கொம்புகளும் கால்களும் உண்டு… ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே…? கொம்புகள் எங்கே..? ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம். பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்.. அதன் படியே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்…

View More ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்