
மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான்…. எண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூரில் திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளை பின்னர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைப்பதில்லைவில்லை….. கூர்க் பிரதேசத்தில் திப்பு செய்த அராஜகம் போல வரலாற்றில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. கட்டாயப்படுத்தி பத்தாயிரம் இந்துக்களை முசல்மான்களாக மதமாற்றம் செய்தான்…