
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள்… தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது…