Posts Tagged ‘ ஸ்வான் டெலிகாம் ’

2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன? [மேலும்..»]

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வங்கிகளின் பங்கு

மத்தியத் தணிக்கைத் துறையின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட 85 நிறுவனங்களில் இந்த ஐந்து நிறுவனங்களும் அடக்கம்... இந்த அடகு ஒப்பந்தத்தில் தொலைத் தொடர்புத் துறையின் சார்பாக ஏ.கே.ஸ்ரீவத்ஸவா, பி.கே.மிட்டல் இருவரும் கையெழுத்திட்டுள்ளார்கள்... இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெற வேறு எந்த விதமான அசையா சொத்துக்களையும் செக்யூரிட்டியாகக் கொடுக்கவில்லை... திருமதி இந்திரா காந்தி, சாதாரண ஏழை எளிய மக்களும் வங்கிகளில் கடன்பெற்று, தொழில் துவங்க வேண்டும் என்பதற்காகவே வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதாகத் தம்பட்டம்... [மேலும்..»]

ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]

November 23, 2010
By

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார் அ.ராசா... இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது... மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான். [மேலும்..»]