Posts Tagged ‘ ஹிந்துத்துவம் ’

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!

திருமாவளவனைத்தான் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கான எம்.பி. க்கள் குழுவில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இடம் பெறச்செய்தது. அவரும் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஒரு தேசிய தலைவரைப் போல் அவர்களுடன் காஷ்மீருக்குச் சென்று திரும்பினார். திரும்பிய பிறகு அவர் கூறியது, ‘காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதுதான். [மேலும்..»]

கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா?

December 22, 2010
By

Bofors பீரங்கி ஊழலைப் பற்றி விசாரிக்க என JPC முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதுவும் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? முக்கியமாக ராஜீவ் காந்தி குடும்பத்தின் பெயரைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனாலும் ஒரு சில வாரங்களிலேயே சோனியா-ராஜீவ் காந்தியின் இத்தாலிய நண்பரான ஆட்டோவியோ குவத்ரோச்சிக்கும், மற்றும் சிலருக்கும் Bofors நிறுவனம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 7.3 மில்லியன் டாலர்கள் போட்டிருப்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன. [மேலும்..»]

காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று

December 1, 2010
By

1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் "சந்த்" எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 6

November 27, 2010
By

ஆக அகந்தையின் மூலத்தை அறிய வேண்டுமென்ற உறுதிதான் ஞான விசாரத்தின் உயிர் நாடி. அந்த உறுதி தளராமல் இருக்குமானால், சீடன் வேறு எந்த சாதனையும் செய்யத் தேவை இல்லை. ஆதலால் ஆன்மாவாகிய பிரம்மத்தை மனத்தில் இருத்தி செய்யப்படும் தியானம் துணையாகுமே அன்றி எப்படி மனத்தையே அழிக்கும் சாதனமாகும் என்று கேட்கிறார் ரமணர். [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 4

November 6, 2010
By

ரமணரின் "நான் ஆன்மாதான்" என்று மதுரையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், பிற்காலத்தில் அதைப்பற்றி "அருணாச்சல அஷ்டக"த்தில் அவரே எழுதியுள்ளதையும் பாருங்கள். முதல் செய்யுளில், "அருணாச்சலம் எனக் கேட்டதும், அதுதான் திருவண்ணாமலை என ஒருவர் சொல்லியும், அது ஏதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று என் புத்தியில் தோன்றிக்கொண்டு இருந்தது. அதன் உண்மைப் பொருளை நான் அறியவில்லை. என் அறிவை அது மயக்கி, என்னை அதன் அருகினில் ஈர்க்க நானும் வந்த போது அது அசலமாய் இருக்கக் கண்டேன்" என்கிறார். [மேலும்..»]