Posts Tagged ‘ ஹிந்து இணையத் தளங்கள் ’

தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017

இந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத் கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள். இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்), ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்) மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். விருது விழா ஜூன் 10, 2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக, அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]

DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்

பேஸ்புக்கில்  இந்து தர்மத்தின் பெருமைகள்,  இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி வருகின்றனர். இந்து எதிர்ப்பு  பிரசாரங்களுக்கும் அருமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்..  இத்தகைய தர்ம சேவகர்களை ஒன்றிணைத்தால்  இன்னும் சிறப்பாக இணையத்திலும்  அதோடு  நேரடி களப்பணிகளிலும் ஈடுபடலாம் என்ற நோக்கத்துடன்  சில குழுங்களும் தொடங்கப் பட்டுள்ளன. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட DHARM பேஸ்புக் குழுமம் மிக அருமையாக இந்து தர்மம் குழித்த விழிப்புணர்வை உண்டாக்குவதுடன், களப்பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறது. இந்தக் குழுமத்தின் வலைத்தளம்: https://www.facebook.com/groups/dharamwarriors/ சமூக வலைத்தளங்களை  அரட்டைக்கும், நேர விரயத்திற்குமே பலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில்,  அதன் மூலம்  நல்ல பணிகளை  முன்னெடுக்கும்... [மேலும்..»]

விவேகானந்தம்-150: இணையதளம்

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டை (2013-2014) பாரத நாடும், உலகெங்கும் உள்ள இந்துக்களும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதையொட்டி, சுவாமிஜியின் சிந்தனைளை, படைப்புகளை, வாழ்க்கைக் குறிப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தேசிய சிந்தனை கழகம் என்ற அமைப்பு விவேகானந்தம்-150 என்ற இணையதளத்தை சில மாதங்களாக நடத்தி வருகிறது. http://vivekanandam150.com சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் போதனைகளையும் வெளிப்படுத்துவதாக இந்த இணையதளம் திகழ்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட பழைய, புதிய எழுத்தாளர்கள் சுவாமி விவேகானந்தர் குறித்து பல்வேறு விதமான பதிவுகளூம், நல்ல மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் இந்தத் தளத்தில் உள்ளன. மேலும், தினந்தோறூம் புதிய எழுத்தாளர்கள் எழுதும்... [மேலும்..»]

ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே என்ற சகோதர இணையதளம் கடந்த ஒரு மாதமாக இயங்கி வருகிறது.. தமிழில் இந்து அறிவியக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப் பட்ட இந்துத்துவ பதிப்பகம் சார்பாக நடத்தப் படும் இந்த இணையதளம் பல அருமையான படைப்புக்களையும், விவாதங்களையும் வரும் நாட்களில் தொடர்ந்து வழங்கும்.. இத்தளம் வழியாக இந்துத்துவ பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கவும் முடியும். நமது வாசகர்கள் அனைவரும் தங்களது ஏகோபித்த ஆதரவை ஹிந்த்துவம் டுடே இணையதளத்திற்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். [மேலும்..»]

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.... படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும். [மேலும்..»]