தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்… தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே….

View More தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்

சமீபத்தில், இதே இரகத்தை சேர்ந்த ஒருவரை, “ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதைப்போல் இயேசுவை சொல்லிப் பாரும். உங்களைக் கூலிப்படையாக நடத்தும் வெள்ளைக்காரன் செவுளில் ஒன்று விடுவான்” என்று சவால் விட்டேன். எதிர்பார்த்தவிதமே கௌபீனத்தில் கக்கா போய்விட்டார்… பசுவதை இன்றி பால் அருந்த வழி இருக்கிறது. ஆனால், பசுவதை இன்றி மாட்டிறைச்சி அருந்த வழி இல்லை. இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் மட்டுமில்லை. அயோக்கியத்தனமும் கூட. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டால் “போஷிக்க விவசாயியால் முடியாது. எனவே சந்தையில் அடிமாடாக விற்க வேண்டி வருகிறது” என்பதும் கள்ளவாதம். பிஷ்ணோய் மக்களால் போஷிக்க முடியுமெனில் மற்றவர்களாலும் முடியும். பேராசை கொண்டவனால் முடியாது…

View More பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…

View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….

View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!

இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவ நாடுகளிடமிருந்து நிதி பெறும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களும் இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் செக்யூலரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் மௌடீக ஹிந்துக்களும் அதிக அளவில் வேலைபார்க்கும் நிறுவனங்களாகவோ இருக்கின்றன. எனவே அவை அனைத்தும், இந்த தேசத்தின் ஹிந்துத் தன்மையை முழுவதுமாக அழித்து, கிறுத்துவ கலாசாரத்தை இந்நாட்டில் நுழைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.

View More கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!