
அழியாப்பேறு பெற்றவர்களின் புதல்வர்களே! எனது நாட்டினரே! ஒளிமிகுந்து விளங்கிய பல நூற்றாண்டுகளாக வாழ்க்கைக் கடலைக் கடந்து நமது தேசியக் கப்பல் ஓடிவந்துள்ளது…ஆனால் இன்றைக்கோ- நமது குற்றத்தினாலோ அல்லது வேறு எந்த காரணங்களினாலோ அதில் ஓட்டை விழுந்து, பழுதுபட்டுள்ளது. இந்தக் கப்பலில் அமர்ந்துள்ள நீங்கள் இப்பொழுது என்ன செய்வீர்கள்? அதைச் சபித்துக்கொண்டும் உங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டும் பூசலிட்டுக்கொண்டும் நிற்பீர்களா? நீங்கள் அனைஅரும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து ஓட்டைகளை அடைக்க, சிறந்தமுறையில் முயற்சிக்க மாட்டீர்களா? ஆகவே இப்பணியைச் செய்வதற்காக நாம் அனைவரும் நமது நெஞ்சத்து உதிரத்தை மகிழ்வுடன் அளிப்போம்…