ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

பயணம் கிளம்பியதும், முதலில் இறங்கிய இடம் சித்ரதுர்கா கோட்டை.. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும்… கொண்டாட்டங்கள், மாபெரும் வீரச் செயல்கள், சிலிர்ப்பூட்டும் தியாகங்கள், சதி வலைகள், காதல்கள் எல்லாம் கலந்து பெருமூச்சு வரவழைக்கும் கதைகள். கோட்டையிலிருந்து இறங்கும் போது வரலாற்றின் திசை மாற்றங்களை யோசித்துக் கொண்டே வந்தேன்..

View More ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்

மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான்…. எண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூரில் திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளை பின்னர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைப்பதில்லைவில்லை….. கூர்க் பிரதேசத்தில் திப்பு செய்த அராஜகம் போல வரலாற்றில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. கட்டாயப்படுத்தி பத்தாயிரம் இந்துக்களை முசல்மான்களாக மதமாற்றம் செய்தான்…

View More திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்

திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

ஹைதர் அலிக்கும், திப்பு சுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணீமண்டபம் அமைக்கப் படும் என்று தமிழ்க முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.. மதவெறியர்களான, வன்முறையாளர்களான இந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமிழக அரசாலும் மக்களாலும் போற்றத் தகுந்தவர்களா? வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. ஜெர்மன் மிஷநரி எழுதுகிறார் – ”திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”…. நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள்… யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை ஆளப்பட்டு வந்தது. திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது. அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது…. திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்… .

View More திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்

தங்களது பயங்கரவாதத் தன்மை மறைய வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகின்ற சில இஸ்லாமிய அமைப்புகள், காலத்திற்குத் தகுந்தாற்போல் அரசியலில் தங்களது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு நல்லவர்கள் போல் காட்சி அளிக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தித்தனத்திற்கு தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான… இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்… அல்-உம்மா மற்றும் ஜிகாத் இயக்கங்கள் தடை செய்யப்பட்டவுடன் திமுகவின் ஆதரவுடன், “மனித நீதிப் பாசறை” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை… தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு, தனி பாகிஸ்தானாகக் காட்சி அளிக்கிறது…

View More பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்