[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்

ஒரறிவு படைத்த உயிர்கள் இப் பிரபஞ்சத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஈரறிவு படைத்த உயிர்களாகவும பின் அவைகள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறறிவு படைத்த உயிர்களாகப் பரிணமித்து வருகின்றன. இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையில் இருப்பவன் மனிதன் ஆகின்றான். இனி மனிதனிலும் மிக்கதோர் உயிர் வகையை இப்பூவுலகில் யாரும் பார்த்ததில்லை. இப்பூவுலக அமைப்பில் மனிதனே அதிகமான இந்திரியங்களும், விரிந்து செயலாற்றக் கூடிய அந்தக்கரணமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறான். இனி, மனித நிலைக்கும் மேலான ஒரு நிலை உண்டு. அது தெய்வீக நிலை எனப்படும். மனம் மனிதனிடத்து ஓயாது அலையும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆகையால் தான் மனிதன் அநேக காமங்களுக்கு ஆளாகிறான். அக்காமங்களைத் தெய்வீகக் காமமாக மனிதன் மாற்றியமைக்கத் தெரிந்து கொண்டால் காமத்தின் வேகம் குறைகிறது. காமம் முற்றிலும் அகன்றவிடத்து மனிதன் தெய்வ சொரூபமாகிவிடுகிறான். மனிதநிலையில் இருக்கும் நாம் இந்த மேலாம் நிலையை அடைய முயற்சி எடுத்துக்கொண்டு அந்நிலையை யடைகிறபொழுது நம்முடைய காமத்துக்கும் ஒரு முடிவு உண்டாகிறது. மனித இனத்தில் ஓர் உத்தமர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியயண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே என்று இறைவனிடம் பரிந்து விண்ணப்பிக்கிறார். கண்ணா! மனம் அலையும் தன்மையது : திடமுடையது ; அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் என்கிறான் மஹாரதனாகிய அர்ஜூனன்.

சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்து வர ஆசை பயன்பட்டது. மானுட நிலையில் ஆசை இருவிதப்படுகிறது. மனிதனைப் பந்தத்தில் தள்ளவும், பாரமார்த்திக நெறிக்கு எடுத்துச்செல்லவும் ஆசை மனிதனுக்குப் பயன்படுகிறது. இந்த ஆசைக்கு இருப்பிடம் மனது ஆகும். இந்த மனது என்பது யாது? அதன் இயல்பு என்ன? மானுட நிலையில் அதை உயர்ந்ததோர் காரியத்துக்குப் பயன்படுத்துவது எப்படி, என்பனவற்றை ஆராய்வோம்.

View More [பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்

எழுமின் விழிமின் – 31

சுதந்திரமாகவும், அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது. வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அதுபோலத் தான் வாழ்க்கையெல்லாம்….. “நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்” என்று கூறிய தேவபுருஷர் புத்தர் ஒருவர் தான்…. மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள்….

View More எழுமின் விழிமின் – 31

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் ‘பிணம் சுடு தடி போல்’ என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்…. தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித் தானே ஓடி வருகிறது? இப்படித்தான் மனிதர்களும் தான் விரும்புவதை நோக்கி ஓடிக்கொண்டும், வெறுப்பதை விட்டு விலகியும் இருக்கிறார்கள். விலங்குகளின் இந்தக் குணத்திலிருந்தும் மனிதன் மீள வேண்டாமா என்று கேட்கிறார்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

ரமணரின் கீதாசாரம் – 13

எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும். […]

View More ரமணரின் கீதாசாரம் – 13

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய் [..]

View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

அறியும் அறிவே அறிவு – 5

சீட்டாட்டத்தின்போது விழும் சீட்டுகள் விதி; அதை வைத்துக்கொண்டு ஆடுபவரின் திறன் மதி என்பார் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்… நாம் மற்ற விலங்கினங்களைவிட இயற்கையில் பலம் இல்லாது உள்ளோம். அறிவே நமது பலம். எதையும் நல்ல முறையிலோ தீய முறையிலோ பயன்படுத்திக் கொள்வது அவரவர்கள் அறிவு முதிர்ச்சியைப் பொருத்து அமைகிறது.

View More அறியும் அறிவே அறிவு – 5