ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

ஐந்து மாநிலங்களிலும் ஐந்து விதமான தீர்ப்புகள். இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒவ்வொரு கட்சியும் மகிழ்ச்சி அடையவும் வருத்தம் கொள்ளவும் பல முடிவுகளை அளித்திருக்கிறது எனில் மிகையில்லை.. பல தசாப்தங்களாக இக்கட்சிகளின் பிடியில் இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக இப்போது இரண்டாவது பிரதானக் கட்சியாகி இருக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு சோகத்திலும் ஆறுதல்… தமிழகத்தில் கருணாநிதியின் நேரடி வாரிசான ஸ்டாலின் தனது அரசியல் தலைமையை நிரூபிக்கும் கட்டாயமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் அடுத்த தலைமை தானே என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தன. இந்தச் சோதனையில் இருவருமே வென்றுள்ளனர்…

View More ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

தேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்

நேற்று ஏப்ரல் 4, ஞாயிறு அன்று, தமிழ்நாட்டின் பல நாளிதழ்களிலும் “திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற நான்கு பக்க விளம்பரம் “பொதுநலன் கருதி வெளியிடுவோர்: அ.இ.அ.தி.மு.க” என்ற குறிப்புடன் வந்திருந்தது. முக்கியமான, ஆதாரபூர்வமான செய்திகளின் தொகுப்பாக அந்த விளம்பரம் அமைந்திருந்தது. அந்த நான்கு பக்கங்களை மட்டும் ஒரு pdf கோப்பு வடிவிலும், High resolution படங்களாகவும் பொதுநலன் கருதி இங்கு அளிக்கிறோம்..

View More தேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்

2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா? : சில கருத்துக்கள்

ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தால் மட்டும்தான் திமுக இதுவரை அரியணை ஏறியுள்ளது. என்றுமே மக்கள் திமுகவை ஆதரித்து வாக்களித்தது இல்லை. நடப்பு அதிமுக ஆட்சியை மக்கள் சிறிதும் வெறுக்கவில்லை. கொரோனா காலத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளுக்கும் முன்னுதாரணமாக ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ். தலைமையிலான தமிழக அரசு நடந்துள்ளது… இதற்கு மாற்றாக எதிரே இருப்பது என்ன? 2006-11 வரை ஒரு மிக மோசமான ஆட்சியை கொடுத்த திமுகதான். அதில் கருணாநிதியைத் தவிர மீதி உள்ளவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். அல்லது அவர்களின் வாரிசுகள் இருக்கிறார்கள். அதற்கு இந்த ஆட்சி எவ்வளவோ மேல்..

View More 2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா? : சில கருத்துக்கள்

தேர்தல் 2021: யாருக்கு வாக்களிப்பது?

அதிமுக புனிதமான கட்சியா என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் நேர்மையான பதில் கிடையாது. ஆனால் எக்காரணம் கொண்டும் பாஜக உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்று ஒரு பெருங்கூட்டமே கொள்கை வகுக்கும்போது, திமுகவைத் தோற்கடிப்பதை லட்சியமாகக் கொள்வதில் பிழை ஏதுமில்லை… முதல்வர் எடப்பாடியை நோக்கி வீசப்படும் வசைகளெல்லாம் அடிவயிற்றில் இருந்து எழும் வெறுப்பை தவிர வேறேதும் இல்லை. எங்கிருந்தோ திடீரென வந்து தங்கள் வெற்றியை தடுக்க நிற்கிறானே ஒருவன்? என்கிற காழ்ப்புதான் இது…

View More தேர்தல் 2021: யாருக்கு வாக்களிப்பது?

2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?

கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது… எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது… திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது…

View More 2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?