Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ அனுபவம் ’

அனுபவம்

சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2

சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2

“திடீர்னு ஒரு வயசான பெரியவரு பண்டாரம் மாதிரி வந்து எதிர நிப்பாரு………டேய் அப்பா………சாப்பிட்டு நாலு நாளாவுது ஏதாச்சும் சாப்பிட வெச்சிருக்கியான்னு கேப்பாரு………இந்த ஆள இதுக்கு முன்னாடி இந்த மலைல பாத்ததில்லயே………என்ன ஏதுன்னு விசாரிச்சா சரியா பதில் சொல்ல மாட்டாரு………சரின்னு சாப்பிட ஏதாச்சும் கொடுத்தா.……கைல வச்சு சாப்டுக்கிட்டே அப்டியே நாலு அடி நடந்து பொகையா மறஞ்சுடுவாரு………இங்க இருக்கற நாய் மட்டும் கத்தி ஊளையிடும்………அந்த மாதிரி விதவிதமா சித்தருங்க நடமாடிட்டே இருப்பாங்க………” அவர் சொல்லச்சொல்ல சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டே இருந்தேன்.. [மேலும்..»]

அனுபவம்

சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1

சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1

இந்த மலைக்கு செல்ல மதுரைக்கு அருகேயிருக்கும் வத்திராயிருப்பில் இருந்து ஏறக்குறைய நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள மலையின் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையிலிருந்து போவதுதான் கடினம் குறைந்த பாதை சதுரகிரியில் இருந்து அருள்பாலிக்கும் சுந்தரலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் ஆகிய லிங்கத்திருமேனியனை தரிசிக்க அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் குறைந்தது 10000 முதல் 70000 பக்தர்கள் வரை இந்த மலைக்கு வருகிறார்கள் [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 5

February 26, 2011
-
ரமணரின் கீதாசாரம் – 5

ஒரு பொருளின் இருப்பையும், இல்லாமையையும் உணர்கிறோமே, அந்த உணர்வு என்பதற்கு ஒரு வடிவமும் இல்லை, அதை நாம் நம் புலன்களாலும் அறிவதில்லை. ஆக புலன்களால் அறியப்படுவது என்பது நம்மைச் சுற்றி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கே அன்றி நமக்கோ நமது உணர்வுக்கோ இல்லை என்றே ஆகிறது. [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

அமைதியின் ஓசை

February 2, 2011
-
அமைதியின் ஓசை

வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது... அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்... திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

போகியை யோகி எனல்

போகியை யோகி எனல்

உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது. [மேலும்..»]

புத்தக விமர்சனம்

சீனா – விலகும் திரை

சீனா – விலகும் திரை

நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல... எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார். [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5

...இது எழுதி முடிக்கப்பட்டதும் சில நாள்கள் கழிந்தபின் இன்னொன்றை கவனித்தேன். முன்னர் இருந்தது போல் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஒரு துடிப்பு அடங்கிவிட்டது. முதல் நாள் மலை உச்சிக்குச் சென்று வந்ததுபோல், அன்று எழுதத் துடிக்கும் உச்சிக்கும் சென்று வந்துவிட்டதுபோல் இருந்ததோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4

என்னை அழைத்துக்கொண்டு போன அதிகாரிக்குப் பயம்வர ஆரம்பித்து தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயற்சித்தார். நானோ எந்தக் கவலையும் இல்லாமல் எனக்குத் தெரிந்தவரை எல்லாம் சொல்லிவிட்டு அப்புறமாகத்தான் எனது அதிகாரியுடன் வெளியே வந்தேன். இன்றைக்கும் எனது அதிகாரியின் நடுக்கம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நானோ அங்கு கல் போல, மலை போல உட்கார்ந்து அளவாகப் பேசியதும் நினைவு இருக்கிறது. அன்று அக்ஷர மண மாலையில் எவ்வளவு மனனம் செய்தேன் என்பது அப்புறம்தான் ஞாபகத்திற்கு வந்தது. அந்த வரிகள்... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2

வீடு திரும்பும் வழியெல்லாம் மனதில் தோன்றி பின் நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளையே பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு புதிது... நடந்ததை நடந்தபடியாக ஒரு சாட்சியைப்போல் பார்த்துக் கொண்டிருப்பதில் தவறேதுமில்லை; தான் நினைத்ததை நடத்துவதுபோல் எண்ணுவதுதான் தவறு... இறைவனே இல்லை என்றவர்கள், ஒருவனே தேவன் என்கிறார்கள், ஏழையில் காண்போம் என்கிறார்கள். மற்றும் “ஓம் சூர்யாய நமஹ:” என்பதற்கு “ஞாயிறு போற்றுதும்” என்கிறார்கள் அல்லவா? [மேலும்..»]

ஆன்மிகம், தத்துவம், பொது

வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை "உண்மை" என்றும், வாய் வழியே வரும்போது அதை "வாய்மை" என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை "மெய்" என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது "சத்" என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள "வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்? [மேலும்..»]