ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்

ஆர்யா என்ற சந்தத்தில் அமைந்த அழகும் இனிமையும் ததும்பும் இந்தத் துதிப்பாடல் ஆதிசங்கரர் அருளியது என்று சம்பிரதாயமாக கருதப்படுகிறது.. இளஞ்சூரியனென முகமலர் – கருணை ரசம் நிறைந்து ததும்பும் கண்கள் – உயிர்தருவோனைப் போற்றுவேன் – அழகிய மகிமையுடையோன் – அஞ்சனையின் பேறானோன்..

View More ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்

கம்பனும் காளிதாசனும்

யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி எழுமானால், கைவிரல்களை மொத்தத்தையும் மடக்கி, முதலில் சுண்டுவிரலைப் பிரித்தவாறு, ‘காளிதாசன்’ என்ற பெயரை உச்சரித்தால், அடுத்து வருவது அநாமிகா! (பெயரிலி, மோதிரவிரல் என்று இரு பொருள் இச்சொல்லுக்கு உண்டு). காளிதாசனுக்குப் பிறகு, கவிஞன் என்று பெயர் சொல்லவே யாருமில்லை என்ற பொருள்பட அமைந்த இந்த ஸ்லோகம், தெரிந்தோ தெரியாமலோ கம்பனால் இந்திரஜித்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. It is a pleasant coincidence.. வால்மீகியை ஒட்டியும் வெட்டியும் மாற்றியும் காளிதாசன் செய்திருக்கும் சித்திர வேலைப்பாடுகளில் பல, கம்பனுடைய காவிய அமைப்புக்கு வித்தாக இருந்திருக்கின்றன என்ற செய்தியையே தமிழகத்தில் இதுவரையில் யாரும் எடுத்து முன்வைத்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒருசில எடுத்துக் காட்டுகளையும் காண்போம்…

View More கம்பனும் காளிதாசனும்

அனுமன் எனும் ஆதர்சம்

நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்… சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்….

View More அனுமன் எனும் ஆதர்சம்

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

வானர சேனைகள் கடல் கடந்து இலங்கை போவதற்கு ராமர் கடல் அரசனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோளுக்குப் பயன் ஏதும் இல்லாது போகவே, அவர் கடல் அரசனுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட அரசன் உடனே அங்கு தோன்றி கற்களால் ஆன பாலம் ஒன்றை நளன் கட்டலாம் என்று கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டான். … உத்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்றும், ராமருடைய பட்டாபிஷேகத்துடன் முடியும் யுத்த காண்டமே ராமாயணத்தின் இறுதிப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று சில பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆறு காண்டங்களில் தொடராக நடக்கும் நிகழ்வுகளைக் கண்ட நமக்கு, ஏழாவது காண்டம் துயர் நிறைந்ததாக உள்ளதால் அது ஒரு இடைச் செருகல் என்று சொல்லப்படுவது ஒரு நிறைவான வாதமாக எடுபடவில்லை….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6

போகும் வழியில் காணப்படும் மலைக் குன்றுகளையும், நதி ஓடைகளையும் “சீதை எங்கே? எங்கே?” என்று ராமர் கேட்டுக்கொண்டே போக, அவைகளுக்கு ராவணன் மேல் இருந்த அச்சத்தால் அவை எல்லாமே மௌனம் சாதித்தன. அவ்வாறு அவர் மான்களின் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவே அவை யாவும் ராமருக்கு உதவி செய்வது போல, எல்லாமே வானத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துக்கொண்டே, தெற்கு நோக்கிப் பாய்ந்தோடின. அதிலிருந்து சீதை வான் வழியே, தென்திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் என்று லக்ஷ்மணன் புரிந்துகொண்டான்… சுக்ரீவனை விட வாலி வலிமை படைத்தவன் என்று இருந்தாலும், வாலியை விடுத்து சுக்ரீவனைத் தனது கூட்டாளியாக ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்? மற்ற கரடிகள், குரங்குகள் போல வாலி, சுக்ரீவன் இருவருமே ராமரின் உதவிக்காக இறைவனால் உருவாக்கப்பட்டிருந்தபோதும், வாலியின் நடத்தை எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தது….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

கம்பனும் இலங்கையும்

கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…

View More கம்பனும் இலங்கையும்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே   அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான்.

ஒரு சண்டையில் எதிரியை வெல்ல ஒருவனுக்கு மோதவும், கொல்லவும் அதற்கான உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட வேண்டும். அதனால் சவால்கள் விடப்படும் போது எதிரியின் வலிமையைப் பற்றி காரசாரமாகவும், கீழ்த்தரமாகவும் தூற்றிப் பேசுவார்கள். அதுவே அவர்களை ஆக்ரோஷமாக மோதத் தூண்டிவிடும். முன் காலத்தில் நடந்த மாதிரி இப்போதெல்லாம் எவரும் நேருக்கு நேர் மோதாததால், சண்டைக்கு முன் நடந்த நேரடியான சவால் பேச்சுக்கள் எல்லாம் இக்காலத்தில் கேட்கப்படுவதில்லை. அதெல்லாம் இலக்கியத்தில்தான் காணப்படுகின்றன. ஒரு போருக்கு முன் நாம் பத்திரிகைகள், மற்றும் ஊடகங்கள் வாயிலாகக் கேட்கும் மறைமுகத் தாக்குதல்கள் மட்டும் தான் இப்போதெல்லாம் நடக்கின்றன. போர் நடக்கும் போதோ போரின் வழிமுறைகள் தெரிந்து விடக்கூடாதே என்பதால் அவைகள் பொதுவாக இருட்டடிக்கப்படுகின்றன; அல்லது பொய்ச் செய்திகள் திரித்து விடப்படுகின்றன.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ தன்னைக் காட்டிக்கொள்ளாதபடி இருக்கவும் சொன்னார்.

விழிப்புடன் இரு! கூர்மையாகக் கவனித்துக்கொண்டு, வில்லில் நாணேற்றும் போது வேகமாகச் செய்து எதிரி மேல் அம்பைச் செலுத்துவதில் முந்திக் கொள். எதிரியின் ஆயுதங்களிலிருந்து எட்டி இருந்து அவை உன்னை அடையாதபடி காத்துக்கொள்.

போர்க்களத்தில் யார் வேகமாகத் தன் தாக்குதலைச் செய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். ஒரு இமைப்பொழுது என்றாலும், அது ஒருவருக்கு வாழ்வா சாவா என்பதை நிச்சயிக்கும். கவனிப்பதிலோ, எய்வதிலோ, தாக்குவதிலோ எதையும் எவரால் வேகமாகச் செய்ய முடியாதோ அவருக்குப் போர்க்களத்தில் எந்த உத்திரவாதமும் இல்லை; அதனால் அவர்க்குப் போர்க்களம் ஒரு கொடுப்பினையே அல்ல.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான். எதிரிக்கு அவகாசம் ஏதும் கொடுக்காமல் திடீரென்றும், இலை மறைவு காய் மறைவு ஏற்பாடுகளுடன் இரவோடு இரவாகவும் சரித்திரத்திலும், சமீப காலத்திலும் காணப்படும் சில போர்களில் இருந்து இது வித்தியாசமானவை.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25