கோவை புத்தகக் கண்காட்சி 2010

இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது… கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம்…

View More கோவை புத்தகக் கண்காட்சி 2010