Posts Tagged ‘ அறம் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…

யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…

அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் »

ஆன்மிகம், புத்தக விமர்சனம்

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். "நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்" என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; ... ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்...

மேலும் »

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது - இன்றைய தமிழக முதல்வர் உட்பட... திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்?

மேலும் »

இலக்கியம், பொது, ராமாயணம்

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

March 24, 2010
-
நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது... சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்... தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?

மேலும் »

இந்து மத மேன்மை

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், வழிகாட்டிகள்

வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

August 12, 2009
-
வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்? எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின் பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்! 1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள். தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.

மேலும் »

சமூகம், பொது, பொருளாதாரம்

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ....

மேலும் »