பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31

மேற்சொன்ன நான்கு வகையான நெறிகளின் வழியே நடந்து மனத்தில் உள்ள இருள் நீங்கப் பெறவேண்டும். எவ்வித முன்பின் முரண் வாக்குகள் கூறாமல் தெளிவான அறவுரைகள் மூலம் அறவண அடிகள் மணிமேகலையின் மனதில் ஞானதீபம் ஒன்றை ஏற்றிவைத்தார்.

மணிமேகலை தவக்கோலம் பூண்டு அறவணஅடிகளின் அறவுரைகளைக் கேட்டு பிறப்பிற்குக் காரணமான துன்பங்கள் நீங்கவேண்டி நோன்பிருக்கத் தொடங்கினாள்.

View More பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31

தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30

ஒருவன் கழுதை ஒன்றையும், கணிகை ஒருத்தியையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கிறான். சிலநாள் சென்று அவன் கழுதையை மட்டும் பார்க்கும்போது அங்கே கணிகையும் வந்திருப்பாள் என்ற அனுமானத்திற்கு வரமுடியுமா? முடியாது. ஏனென்றால் நெருப்பு இல்லாத இடத்தில் புகையில்லை என்று மேற்கோள் காட்ட்டப்படும் அந்த எதிர்மறை உடன்நிகழ்ச்சியாகிய வெதிரேகம் (வியதிரேகம்) பொருளின் இருப்பைச் சாதிக்கும் என்றால் நாய்வால் இல்லாத கழுதையின் பிடரி மயிரைக் கண்டவன் அது நாய்வாலோ அல்லது நரி வாலோ என்று மயங்குகிறான். அங்கு இரண்டுமே இல்லை என்று தெளிகிறான். அவனே வேறொரு இடத்தில் வால் ஒன்றைக் கண்டு இது நாய்வால் இல்லை என்று துணிந்தால் நரிவாலும் இல்லை என்று துணியலாமா? கூடாது.

View More தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30

மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை

தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!

View More மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25

இந்த உடம்பின்கண் தோன்றும் பொய், களவு, காமம் என்ற மூன்றும் தீவினையாகும். நமது வாய்மொழியில் தோன்றுவது நான்கு. அவை பொய், குறளை எனப்படும் நிந்தனைச் சொற்கள், கடுஞ்சொல் மற்றும் பயனற்ற சொற்கள் என்பவையாகும். மனதில் தோன்றும் மூன்று ஆசை, கோபம், மயங்குதல் என்பவையாகும். மேற்சொன்ன பத்தும் தீயவழிகளாகும். நன்கு கற்றறிந்தோர் இந்தப் பத்தின் வழி செல்லமாட்டார்கள். அப்படிச் சென்றார்களாயின் விலங்குநிலை, பேய்நிலை அல்லது நரகநிலை அடைந்து மனத்தளவில் துன்பங்களை அனுபவிப்பார்கள்.. நல்வினை எதுவென்று கேட்டால் மேற்கூறிய பத்து வினைச் செயல்களையும் தவிர்த்து, நல்லொழுக்கத்தின்கண் நின்று, தானங்கள் செய்து, மனிதர், தேவர் மற்றும் பிரம்ம நிலைகளை எய்தி இன்புற்று இருத்தலாகும்…

View More ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25

கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22

அறவண அடிகள் உனக்குப் பல தர்ம சிந்தனைகளைக் கூறுவார். தவத்தையும் தருமைத்தையும் சார்ந்து தோன்றும் பனிரெண்டு நிதானங்களைப் பற்றியும், பிறவியறுக்கும் தருமம்பற்றியும் தனக்கே உரியவகையில் கூறுவார். உலகமக்களின் பாவம் என்னும் இருள் அகல ஞாயிறுபோலத் தோன்றிய புத்தன் கூறிய அறநெறிகளைப் பாதுகாக்க வேண்டி பல பிறவிகள் எடுத்து இந்த நகரத்திலேயே தங்கியிருப்பேன். அவர் உன்னையும் உன் தாய் மாதவியையும் அவருடன் தங்கியிருக்கக் கோருவார். உங்களைப் பல்லாண்டு தவறின்றி வாழ வாழ்த்துவார். உன்னுடைய மனப்பாலான துறவறம் பூண்டு அறநெறி கற்கவேண்டும் என்பது நிறைவேற வாழ்த்துவார்

View More கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.

View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான். மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்

View More பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

என்னுடைய தேசத்தில் நல்லறங்கள்செய்வதால் வளமையான வாழ்வினைப்பெற்று மாடமாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்கள் நிறைய உள்ளனர். அந்தச் செல்வந்தர்களின் இல்லங்களின்முன் நின்று நைந்துபோன கந்தல் ஆடைகளை அணிந்து, மழை வெயில் பாராமல் நிற்கவும் முடியாமல் பிச்சைகேட்டு அழைக்கவும் நாணப்பட்டுப் பசியில்வாடும் வறியவர்கள் பலர் உள்ளனர். பெற்ற குழந்தை பசியால் வாடியவுடன் ஈன்ற தாயின் முலைக்காம்புகள் தானே சுரப்பதுபோல, வறியவர்களின் பசிப்பிணியைக் கண்டு இந்த அட்சய பாத்திரமானது தானே உணவு சுரக்கச்செய்யும் திறனை நேரில் காண விழைகிறேன்.

View More பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11

“உயர்ந்த விதை நெல்லாகிய கந்தச்சாலி பயன்தர, அதிலிருந்து நாற்றுகள் கிளம்பி நல்ல அறுவடையை அளிக்க வேண்டும். அதைவிட்டு வெம்மையான பாலைவனத்தில் வெந்து மாவாகி உதிர்ந்து விட்டால் என்ன பயன்? அதைப்போல, புத்ததர்மத்தின் வழிநின்று இந்த உலகிற்குப் பயன்தரவேண்டிய நீ முற்பிறவியின் தொடர்ச்சியாக உதயகுமாரன் பின்னால் மனதை அலையவிட்டால் என்ன செய்வதென்றுதான் உன்னை இங்குக்கொண்டுவந்து விட்டேன்.”

View More மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11