கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை

முருகன் திரு அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் 122 அடிகளில் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்… கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து, மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத்தளித்து… போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகமளிக்கும் முகமதியும் — தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்… பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சமகற்றும் அயில் வேலும்…

View More கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை

அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

அருணகிரிநாதரின் ஜனனம் எப்படி, எப்போது ஏற்பட்டது? தாய் தந்தையர் யாவர்? பரவலாக கூறப் படுவது போல அவர் தன் வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்தனரா? மேலும் பல நம்பிக்கைகள், ஐதீகக் கதைகள்.. இவற்றை எல்லாம் மீள்பார்வை செய்ய தூண்டும் கட்டுரை…

View More அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.

View More முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி