Posts Tagged ‘ அழகியல் ’

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்... மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?... சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள்.

மேலும் »

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை...

மேலும் »

இலக்கியம், கதைகள், கலைகள், சிறுவர், நிகழ்வுகள்

பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், 'பத்மபூஷன்' கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு 'பால சரஸ்வதி' பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் 'யுவகலா பாரதி' பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான 'எம்ஜியார் விருது' வழங்கியுள்ளது.

மேலும் »

இலக்கியம்

அழகியல் அரசியல்

December 14, 2008
-
அழகியல் அரசியல்

எத்தனையோ சிவபக்தர்களும், ஆத்திகர்களும் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தைப் பார்த்துக் கண்கள் குளமாகி, நெக்குருகி நின்றிருக்கிறார்கள். காரணம் திரைப்பட ஊடகத்தின் அழகியல். அரசியல் கட்சிகள் போல மேடை போட்டு, கெட்ட வார்த்தை பேசவில்லை இப்படம். ஒரு மிகப்பெரிய அறிவுஜீவித்தனத்தை முன்வைப்பது போலவே, ரோஹிந்தன் மிஸ்த்ரி, அரவிந்த் அடிகா நாவல்கள் போலவே, அருந்ததிராயின் அரைகுறைக் கட்டுரைகள் போலவே ஒரு தத்துவம் போல், இலக்கியம் போல் தன்னை முன்வைத்துக் கொண்டது ‘அன்பே சிவம்’ திரைப்படம்.

மேலும் »